|
கொடுமை கொண்ட இம்
மண்ணுலகச் சார்புடையோரின் வளர்ந்த
பகையாகிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டு அறத்தில் நிலைபெறக்
கூடியவர் யார்? சொல்லுவாய்" என்றான்.
'குன்றும் குன்றும்'
என்பதனை, 'எறும்பூரக் கல்லும் தேயும்' என்பது
போற் கொள்க. 'சொல்மின்' என்றவிடத்து, 'மின்' ஒருமைக்கு வந்தது
புதிய மரபு.
| 28 |
நீரேந்தி
மலர்மிதக்கு நிகரா வல்லோன் கையருளின்
சீரேந்தி யெவர்நில்லார் தெறுநர் தெவ்வுந் திருப்பயத்த
லேரேந்தி வரைந்திட்ட வின்னகாதை காட்டுமென்றான்
பாரேந்தி யணிதிலத மெனநற் சீலப் படலையினான். |
| |
"நீர் ஏந்தி
மலர் மிதக்கும் நிகரா, வல்லோன் கை அருளின்
சீர் ஏந்தி, எவர் நில்லார்? தெறுநர் தெவ்வும் திருப் பயத்தல்,
ஏர் ஏந்தி வரைந்திட்ட இன்ன காதை காட்டும்" என்றான்,
பார் ஏந்தி அணி திலதம் என நல் சீலப் படலையினான். |
இவ்வுலகம் போற்றி
அணியத்தக்க திலகம் போல நல்ல
அறவொழுக்கத்தைத் தனக்கு மாலையாகக் கொண்டுள்ள சூசை, "நீர்
தாங்கிக் கொள்வதனால் மலர் மிதப்பதற்கு நிகராக எல்லாம் வல்லவனாகிய
ஆண்டவனின் கை அருட்சிறப்போடு ஏந்திக் கொள்கையில், எவர்
அறத்தில் நிலைபெறார்? பகைவர் பகையும் செல்வத்தைத் தருமென்பது,
அழகைத் தாங்கிய வண்ணம் இங்குச் சித்திரமாக வரைந்துள்ள இந்தக்
கதையே எடுத்துக் காட்டும்" என்றான்.
'நீர் ஏந்தி
மலர் மிதக்கும்', என்று நிறுத்தி, 'நிகரா வல்லோன்'
எனக் கூட்டினும் அமையும்.
| 29 |
பொற்சாய
லரிதங்கண் பொறித்த காதை யென்றனகால்
விற்சாயல் கண்கனிய விரும்பி நோக்கி மதிப்புத்தே
டற்சாயல் மதிவல்லோய் தளிர்த்த வையந் தீர்சிறிது
புற்சாயல் சொல்வலெனப் புகல்மீண் டுற்றான்
றவமூத்தோன். |
|