|
"தெளிவுற மின்னி
முழங்கிய மேகத்தைச் சென்று சேருமாறு படர்ந்த
மரங்களின் உச்சியில் தேனைக் கொண்டு மலர்ந்த இச் சோலையைக் கண்டு
இதன் அருகே தான் செல்லுகையில், காம வேட்கை உள்ளத்தில்
விளையுமாறு புதிய தென்றலாகிய தேரின் மேல் ஏறிச் செலுத்தும் மன்மதனே
எதிர்கொண்ட தன்மை போல, அள்ளிக்கொள்ளத் தக்க வண்ணம் மணத்தை
உமிழ்ந்த காற்றை அங்கு எதிர்கொண்டான்.
| 33 |
புலம்புரை
கேட்டு நண்ணிப் பூம்பொழி லொருங்குஞ் சூழ்ந்தீ
ரலம்புரை முகைத்த தேன்பூ வலரிரு கரையில் விம்மிச்
சிலம்புரை சிலம்பி யோடத் தீந்திரை சுருட்டுங் கங்கை
கலம்புரை மணிப்பொன் மார்பன் கண்டதைக் கடக்க லாற்றான். |
| |
"புலம்பு உரை
கேட்டு நண்ணி, பூம் பொழில் ஒருங்கும் சூழ்ந்து, ஈர்
அலம் புரை, முகைத்த தேன் பூ அலர் இரு கரையில் விம்மி,
சிலம்பு உரை சிலம்பி ஓட, தீம் திரை சுருட்டும் கங்கை,
கலம் புரை மணிப் பொன் மார்பன், கண்டு அதைக் கடக்கல் ஆற்றான். |
"மணிகளாலும்
பொன்னாலும் செய்த அணிகலன் போன்ற மார்பு
கொண்ட நீபகன், யாரோ புலம்பும் உரையைக் கேட்டு அவ்விடம்
நோக்கிச் செல்கையில், இனிய திரைகளைச் சுருட்டியடிக்கும் ஓர் ஆறு,
இப்பூஞ்சோலையை ஒருங்கு சுற்றி வளைத்து, இரண்டு மாலைகள் போல்,
மொட்டாயிருந்து தேன் கொண்ட மலராக விரிந்து கிடந்த இரண்டு
கரைகளிடையே நிறைந்து, சிலம்பு ஒலிப்பது போல் ஒலித்துக்கொண்டு
ஓடக் கண்டான், தான் அவ்வாற்றைக் கடக்க இயலாதவன் ஆனான்.
| 34 |
அவாவுறி
நொந்து நிற்ப வம்புலிக் குழவி வெண்கோட்
டுவாவுறி யமைய நோக்கி யுரங்கொடு வுந்தி யப்பா
லிவாவுறி யிழிந்த பின்ன ரியைந்ததன் வயத்த மாவைச்
சுவாவுறி விழுங்கக் கண்டான் றுளங்குபொற் குன்றத்
தோளான். |
|