|
"அவா உறி நொந்து
நிற்ப, அம்புலிக் குழவி வெண் கோட்டு
உவா உறி அமைய நோக்கி, உரம் கொடு உந்தி அப்பால்
இவா உறி இழிந்த பின்னர், இயைந்த தன் வயத்த மாவைச்
சுவா உறி விழுங்கக் கண்டான், துளங்கு பொன் குன்றத்
தோளான். |
"விளங்கிய பொன்மலை
போன்ற தோளை உடைய நீபகன், ஆற்றைக்
கடந்து உள்ளே வர ஆசை கொண்டு நொந்து நிற்க, பிறை மதி போன்ற
வெண்ணிறத் தந்தம் கொண்ட யானை ஒன்று அங்கு வந்து தன் கருத்துக்கு
அமைந்து நிற்கக் கண்டு, தன் வலிமை கொண்டு தாவி அதன் மேல் ஏறி
ஆற்றைக் கடந்து அப்பால் இறங்கிய பின்னர், தனக்கு வாய்த்த
வலிமையுள்ள அவ்யானையை ஒரு நாய் வந்து விழுங்கிவிடக் கண்டான்.
'உறீஇ' என
அளபெடை பெற்று நிற்க வேண்டிய சொல் இன்னோசைப்
பொருட்டு, 'உறி' எனவே, நின்று, 'உற்று, என்ற பொருள் தந்தது.
மூன்றாமடியில் 'இவர்' என்ற வினைப் பகுதி, எதுகை இன்னோசைப்
பொருட்டு 'இவா' என நின்றது.
| 35 |
மலைபுறங்
கண்ட மார்பன் மனம்வியந் தயிர்ப்பி னோக்க
வலைபுறங் கண்ட கங்கை யரவெழ வளவில் விம்மிச்
சிலைபுறங் கண்ட கூலம் சிவணிமேற் புரளக் கண்டே
யிலைபுறங் கண்ட காவு ளியைந்தவா ளேந்திப் புக்கான். |
| |
"மலை புறங்கண்ட
மார்பன் மனம் வியந்து, அயிர்ப்பின் நோக்க,
அலை புறங்கண்ட கங்கை அரவு எழ அளவு இல் விம்மி,
சிலை புறங்கண்ட கூலம் சிவணி மேல் புரளக் கண்டே
இலை புறங்கண்ட காஉள் இயைந்த வாள் ஏந்திப் புக்கான். |
"மலையையும் வென்ற
மார்பு கொண்ட நீபகன் அதுகண்டு மனம்
வியந்து, ஐயத்தோடு பார்த்து நிற்கையில், கடலையும் வென்ற தன்மையுள்ள
அந்த ஆறு ஓசை எழும்படி அளவில்லாது பெருகி, கல்லையும் வென்ற
கரை முட்டப் பொருந்தி மேலே புரண்டோடக் கண்டு, இலைச்
செழுமைகளையெல்லாம் வென்ற அச்சோலையினுள் பாதுகாப்பாக அமைந்த
வாளைக் கையில் ஏந்திக் கொண்டு புகுந்தான்.
|