பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்374

     "வீண்மீன்கள் போல் மலர்ந்த தன் பசிய மலர்கள் மண மயமான
இனிய தேனைச் சொரிய, பிற மரங்களுக்குத் தானே அரசன் போல்
அவற்றிடையே அமைந்த அக்கொழுமையான மரத்தை அருகில் நின்று
நோக்கி, மணத்தைத் தன் இயல்பாகக் கொண்டு மலர்ந்த சந்தனம் என்னும்
சிறந்த மரம் அதுவென்று கண்டு அதனடியில் நின்றான். அப்பொழுது
பாலுக்கு நிகராக இனிய பண்ணுள்ள பாடலைக் கேட்டு, அது எங்கிருந்து
வருவதென்று கண்களை ஒடுக்கிப் பார்த்தான்.


                 40
சூழக மரங்க டோறுஞ் சூலுளைந் தீன்ற தேபோற்
காழகம் பிளந்து சாய்ந்த காழக முகிலிற் கூந்தல்
கேழக வுடுக்கண் மின்னிற் கெழுநுசுப்
                             பணித்தூ சேந்தி
வாழக மலர்ந்த நூறு மாதரே வருவ கண்டான்.
 
"சூழ் அக மரங்கள் தோறும், சூழ் உளைந்து
                              ஈன்றதே போல்,
காழ் அகம் பிளந்து. சாய்ந்த காழக முகிலின் கூந்தல்,
கேழ் அக உடுக் கண், மின்னின் கெழு நுசுப்பு,
                              அணித் தூசு ஏந்தி,
வாழ் அக மலர்ந்த நூறு மாதரே வருவ கண்டான்.

     "சந்தன மரத்தை உள்ளிட்டுச் சூழ நின்ற மரங்கள்
ஒவ்வொன்றினின்றும், அவற்றின் வைரங் கொண்ட வயிற்றைப் பிளந்து
கொண்டு, கருப்ப வேதனையோடு பெற்றுத் தந்தது போல், சாய்ந்த
கருமேகம் போன்ற கூந்தலும், ஒளியைத் தன்னுட் கொண்ட விண்மீன்
போன்ற கண்களும், மின்னலை ஒத்த இடையும், அழகிய ஆடையும்
தாங்கிய வண்ணமாய், வாழ்க்கைச் செழுமையால் உள்ளம் மலர்ந்த நூறு
மகளிர் வருவதைக் கண்டான்.

                     41
நிழலெடுத் துலவு விண்மீ னிறைமதி சூழ்ந்த தேபோ
லழவெடுத் தெரிக்குங் கண்ணா ரரசனை வளைத்து வீணை
குழலெடுத் தினிய வோதை குயிலெனக் குயில நூறுங்
கழலெடுத் தாடிப் பாடிக் கனிவெடுத் தினைய சொன்னார்.