|
"நிழல் எடுத்து
உலவு விண்மீன் நிறை மதி சூழ்ந்ததே போல்,
அழல் எடுத்து எரிக்கும் கண்ணார் அரசனை வளைத்து, வீணை
குழல் எடுத்து இனிய ஓதை குயில் எனக் குயில, நூறும்
கழல் எடுத்து ஆடிப் பாடி, கனிவு எடுத்து இனைய சொன்னார்: |
"ஒளியைத் தாங்கி
உலாவும் விண்மீன்கள் நிறைமதியைச் சூழ்ந்ததே
போல், நெருப்பைக் கொண்டு எரிப்பது போன்ற கண்களை உடைய
அம்மாதர் அரசனை வளைத்துக் கொண்டு, வீணையும் புல்லாங் குழலும்
எழுப்பிய இனிய ஓசை குயிலோசை போல் இனிது ஒலிக்க, அந்நூறு
மாதரும் காலைத் தூக்கி ஆடியும் பாடியும் கனிந்த தன்மையாய் இவற்றைச்
சொல்லலாயினர்.
மூன்றாமடியில்,
எடுத்த + இனிய - 'எடுத்தவினிய' எனற்பாலது,
'எடுத்தினிய' என வந்தது தொகுத்தல் விகாரம். கழல் - கழலணிந்த
காலுக்கு ஆகுபெயர்.
| 42 |
தூசனை மரங்கள்
சூழ்ந்த துணர்ப்பொழின் முன்னி
வில்செய்
காசனை விருப்பம் பூண்ட கருத்துனை மறவா வெஃகுஞ்
சாசனை உவப்ப வந்தாய் சாசனை யுவப்பிற் காவு
மீசனைக் கண்ட தேபோ லின்பெழக் காணா யென்றார். |
| |
"தூசு அனை மரங்கள்
சூழ்ந்த துணர்ப் பொழில் முன்னி,
வில் செய்
காசு அனை விருப்பம் பூண்ட கருத்து உனை மறவா வெஃகும்
சாசனை உவப்ப வந்தாய்; சாசனை உவப்பின், காவும்,
ஈசனைக் கண்டதே போல், இன்பு எழக் காணாய் ! ' என்றார். |
"மலராடை போல்
மரங்கள்சூழ்ந்த இம்மலர்ச் சோலையில் உனக்கு
முன்னரே வந்து, ஒளி பொருந்திய பொன் போல் உன்பால் விருப்பம்
பூண்ட தன் கருத்தில் உன்னை மறவாமல் ஆசை கொண்டிருக்கும் சாசனை
என்பவள் மகிழுமாறு நீயும் வந்து சேர்ந்தாய்; அச்சாசனையின் மகிழ்ச்சிக்கு
நிகராக, இச் சோலையும், ஆண்டவனையே கண்டதுபோல், இன்பத்தால்
எழுச்சி கொண்டிருப்பதை நீயே பார்!' என்றனர்.
|