|
| 43 |
பாணெறி
யிவற்றைப் பாடப் படர்ந்தசந் தனமும் பீறி
வாணெறி பழித்த நீண்கண் மடந்தையே புறப்பட் டெய்த
வேணெறி யொழுகித் தான்முன் விழைந்தசா சனையின் சாயற்
கோணெறி முகத்திற் கண்டு குலைந்தயிர்ப் புற்று நின்றான். |
| |
"பாண் நெறி
இவற்றைப் பாட, படர்ந்த சந்தனமும் பீறி,
வாள் நெறி பழித்த நீள் கண் மடந்தையே புறப்பட்டு எய்த,
வேள் நெறி ஒழுகித் தான்முன் விழைந்த சாசனையின் சாயல்
கோள் நெறி முகத்தில் கண்டு, குலைந்து, அயிர்ப்பு
உற்று நின்றான். |
"யாழின் தன்மையாக
அம்மகளிர் இவற்றைப் பாடுகையில், படர்ந்து
நின்ற அச்சந்தன மரமும் பிளந்து, வாளின் தன்மையைப் பழித்த நெடிய
கண்களைக் கொண்ட அப்பெண்ணே வெளிப்பட்டுத் தன்முன் வந்து
சேரவும், மன்மதனின் காம நெறியில் ஒழுகித் தான் முன்னே விரும்பியிருந்த
சாசனையின் சாயலை விண்மீன் போல் ஒளிர்ந்த அம்முகத்தில் கண்டு,
காமத்தால் முதலில் மனம் குலைந்து, பின் ஐயங்கொண்டு நின்றான்.
| 44 |
வாளணி கயற்கண்
மின்ன மணியணிக் குழைவில் வீச
நீளணி தயங்கி நாற நிறத்துகி லொளிகள் விம்மக்
காளணி யெறிவேற் சாயற் கனிவுருத் துயிருண் டீஞ்சொல்
வேளணி திலத மொத்தாள் வீணைநற் குரலிற் சொன்னாள். |
| |
"வாள் அணி கயல்
கண் மின்ன, மணி அணிக் குழை வில் வீச,
நீள் அணி தயங்கி நாற, நிறத் துகில் ஒளிகள் விம்ம,
காள் அணி ஏறி வேல் சாயல், கனி உகுத்து உயிர் உண்தீம் சொல்,
வேள் அணி திலதம் ஒத்தாள், வீணை நல் குரலில் சொன்னாள்: |
"மன்மதன் நெற்றித்
திலகம் போன்ற அப்பெண், வாளை அணிந்த
கயல் மீன் போன்ற தன் கண்கள் மின்னவும், மணிகள் அழகு செய்யும்
குண்டலங்கள் ஒளியைப் பரப்பவும், நீளமாக அணிந்த மார்பு வடங்கள்
விளங்கித் தோன்றவும், பொன்னிற ஆடை பல வலக ஒளிகளை வீசவும்,
|