|
நஞ்சு தோய்த்த எறி
வேல் போன்ற சாயலோடு, கனிவைப் பொழிந்து
உயிரை உண்ணும் இனிய சொல்லை வீணை போன்ற நல்ல குரலிற்
பின்வருமாறு சொன்னாள்:
'காளம்' 'கனிவு'
என்ற சொற்கள் கடைக்குறையாகக் 'காள்', 'கனி'
என நின்றன.
| 45 |
மடங்கலே
றுன்னை யென்றார் மடங்கலிற் கொடிய னானாய்
தடங்கையே கொலையில் விஞ்சித் தளர்ந்தவென் னுயிர்கொன்
றாயென்
குடங்கையே மறந்தா யுன்னைக் குணித்துநான் றேட முன்னி
முடங்கலே விளைகான் வந்தேன் முற்றவோ விரங்கா
யென்றாள். |
| |
"மடங்கல் ஏறு
உன்னை என்றார்; மடங்கலின் கொடியன் ஆனாய்.
தடம் கையே கொலையில் விஞ்சி, தளர்ந்த என் உயிர் கொன்றாய்.
என்
குடங் கையே மறந்தாய், உன்னைக் குணித்து நான் தேட முன்னி,
முடங்கலே விளை கான் வந்தேன்; முற்றவோ இரங்காய்' என்றாள். |
"உன்னை ஆண்
சிங்கம் என்றனர்; நீ சிங்கத்தினும் கொடியவன்
ஆனாய். உன் பெரிய சைகளோ கொலைத் தொழிலில் மேலோங்கி
நின்றமையால், தளர்ந்த என் உயிரையும் கொன்றாய். முன் நீ துயின்ற
என் முன்னங் கையையும் மறந்தாய். நான் உன்னையே கருதி, தேடிக்
காண எண்ணி, மூங்கில் வளரும் இக்காட்டின்கண் வந்தேன்; நீயோ
எனக்கு முற்றும் இரங்காதவன் ஆனாய்' என்றாள்.
| 46 |
மட்டுயிர்ப் பதும வாயாள் வயிரக்குன் றுருகத் தேம்பி
நெட்டுயிர்ப் புயிர்த்து விம்மி நெய்த்திடை துவண்டு வாட
வட்டுயிர்ப் பசையுண் பேய்க ளருந்தவந் தவிர்க்க மாயை
நட்டுயிர்ப் பனவென் றெண்ணி நரபதி தேறி னானே. |
|