|
"மட்டு உயிர்ப்
பதும வாயாள் வயிரக் குன்று உருகத் தேம்பி,
நெட்டு உயிர்ப்பு உயிர்த்து விம்மி, நெய்த்து இடை துவண்டு வாட,
'அட்டு உயிர்ப் பசை உண் பேய்கள் அருந் தவம் தவிர்க்க மாயை
நட்டு உயிர்ப்பன' என்று எண்ணி நரபதி தேறினானே. |
"தேனுக்கு உயிர்
தரும் தாமரை மலர் போன்ற வாயை உடைய
அப்பெண் வயிர மலையும் உருகுமாறு புலம்பி, பெருமூச்சு விட்டு அழுது,
தன் இடை நொந்து துவண்டு வாடக் கண்டு, அரசனாகிய நீபகன், 'உயிர்ப்
பசையை வாட்டி உண்ணும் பேய்கள் அரிய தவத்தைத் தவிரச் செய்யுமாறு
இவ்வாறெல்லாம் மாயை காட்டி வந்து தோன்றுவன என்று எண்ணி மனம்
தேறினான்.
| 47 |
தேறினான்
சுழற்றும் வாளாற் சிதைவுக முளைத்த சாகி
நூறிநான் றுமிப்ப லென்ன நுண்ணிடை யணங்குந் தீந்தே
னூறிநான் றெரிந்த சாந்த மொழியவோ செய்வா யென்று
கூறினா ளொருங்கு கையாற் கொழுந்தருத் தழுவி னாளே. |
| |
"தேறினான்,
'சுழற்றும் வாளால், 'சிதைவு உக முளைத்த சாகி,
நூறி நான் துமிப்பல்!' என்ன, நுண் இடை அணங்கும், 'தீம் தேன்
ஊறி நான் தெரிந்த சாந்தம் ஒழியவோ செய்வாய்!' என்று
கூறினாள்; ஒருங்கு கையால் கொழும் தருத் தழுவினாளே. |
"அவ்வாறு தேறிய
நீபகன், 'எனக்குக் கேடு விளையவென்று
முளைத்த இம்மரத்தைச் சுழற்றும் வாளால் அழியுமாறு நான் வெட்டுவேன்!'
என்றான். என்னலும், நுண்ணிய இடையுள்ள அப்பெண்ணும், 'இனிமையான
தேன் ஊறுவதென்று நான் தெரிந்து கொண்ட இச்சந்தன மரத்தை
ஒழிக்கவோ முற்படுவாய்!' என்று கூறி, கொழுமையான அம்மரத்தைத் தன்
இரு கைகளாலும் ஒருங்கு தழுவிக் கொண்டாள்.
| 48 |
பூங்கணை
யுழுத நெஞ்சம் புண்பட வுருவிப் பின்னர்
பாங்கணை மரங்கொய் தொக்கப் பகைத்தசா சனையுங்
கொல்வாய்
தீங்கணை கொடியோ யென்றாள் செல்வனு நகைத்துன் மாயை
யீங்கணை கொடுமை கற்றே னென்றுவாள் வீசி னானே. |
|