|
"பூங் கணை உழுத
நெஞ்சம் புண்பட உருவி, பின்னர்
பாங்கு அணை மரம் கொய்து, ஒக்கப் பகைத்த சாசனையும்
கொல்வாய்,
தீங்கு அணை கொடியோய்!' என்றாள். செல்வனும் நகைத்து,
'உன்
மாயை
ஈங்கு அணை கொடுமை கற்றேன்' என்று, வாள் வீசினானே. |
தழுவிக் கொண்டவள்
நீபகனை நோக்கி, 'தீங்கு நிறைந்த
கொடியனே, மன்மதனின் மலரம்புகள் உழுத என் நெஞ்சம் புண்பட
முதலில் உன் வாளால் உருவக் குத்தி, பின் பாங்காக நான்
அணைத்துக்கொண்டிருக்கும் இம்மரத்தைக் கொய்து, நீ முழுமையாக
இப்பொழுது பகைத்துள்ள இச்சாசனையையும் கொல்வாய்!' என்றாள்.
தவச்செல்வனாகிய நீபகன் அது கேட்டு நகைத்து, 'உன் மாயை இங்கு
நிகழ்த்தவென்று முனைந்த கொடுமையைக் கற்றுக் கொண்டடேன்'
என்று கூறி வாளை வீசினான்.
| 49 |
நாறுசெம்,
மணியின் சாயல் நயப்பெழ நின்றாள் கொண்மூ
கீறுமை யுருவங் காட்டிக் கிளைத்ததோ ளிருநூறாக்கி
நூறுகை வடிவாள் வீச நூறுகை கிடுகை யேந்தச்
சீறுநெய் யெயிற்று நீண்கூன் றிங்களே தோன்ற நின்றாள். |
| |
"நாறு செம் மணியின்
சாயல் நயப்பு எழ நின்றாள், கொண்மூ
கீறுமை உருவம் காட்டி, கிளைத்த தோள் இரு நூறு ஆக்கி,
நூறுகை வடிவாள் வீச, நூறுகை கிடுகை ஏந்த,
சீறு நெய் யெயிற்று நீண்கூன் றிங்களே தோன்ற நின்றாள். |
"கண்டவர்க்கு
விருப்பம் எழுமாறு ஒளி தோன்றும் செம்பவளச்
சாயலாக முன் நின்ற அப்பெண், மேகத்தைக் கிழித்துச் செல்லும் கரிய
உருவம் காட்டி, தன் உடலில் முளைத்த தோள்களை இருநூறாக்கி, ஒரு
நூறு கைகள் கூர்மையான வாளை ஏந்தவும், மறு நூறு கைகள் கேடயம்
ஏந்தவும், சீறிய குருதி தோய்ந்த தன் பற்களாக நீண்டு வளைந்த பிறை
மதியே தோன்றக் கொண்டு நின்றாள்.
|