|
| 50 |
பண்கிளைத்
திசையிற் பாடல் பணித்தமற் றரிவை யாருங்
கண்கிளைத் தெழுந்த செந்தீக் கதத்தநூ றரக்க ராகி
விண்கிளைத் திடியேறெஞ்ச விபுலைசூழ் நடுங்க வார்த்துப்
புண்கிளைத் தொழுகு நெய்த்தோர் பொழிபடை
யேந்தி
நின்றார். |
| |
"பண் கிளைத்த
இசையின் பாடல் பணித்த மற்று அரிவையாரும்
கண் கிளைத்து எழுந்த செந்தீக் கதத்த நூறு அரக்கர் ஆகி,
விண் கிளைத்த இடிஏறு எஞ்ச விபுலை சூழ் நடுங்க ஆர்த்து,
புண் கிளைத்து ஒழுகு நெய்த்தோர் பொழி படை ஏந்தி நின்றார். |
"யாழினின்று
பிறந்த இசை போல் பாடல் நிகழ்த்தி நின்ற மற்ற நூறு
மகளிரும் தம் கண்களினின்று புறப்பட்டு வந்த செந்தீ போன்ற சினத்தைக்
கொண்ட நூறு அரக்கியராக மாறி, மேகத்தினின்று தோன்றிய
கோடையிடியும் குறைபடுமாறு சுற்றிலுமுள்ள உலகம் நடுங்குமாறு முழங்கி,
புண்ணினின்று பெருகியோடும் குருதி சொட்டும் கருவிகளை ஏந்திய
வண்ணம் நின்றனர்.
'கிளைத்த +
இசை', 'கிளைத்த + இடி' என்பன, 'கிளைத்த விசை'
'கிளைத்தவிடி' எனற்பாலன, 'கிளைத்திசை' 'கிளைத்திடி' எனத் தொகுத்தல்
விகாரமாயின.
| 51 |
காரெழுந்
தன்மை வான்செய் கதிர்புதைத் திருள வான்மேற்
போரெழுந் தன்மை மின்னிப் புயற்கிழித் திடிக ளார்ப்ப
நேரெழுந் தன்மை பூங்கா நிரயநேர் வெருவு வீங்கச்
சூரெழுந் தன்மைத் தஞ்சா துளங்கினான் வயிர நெஞ்சான். |
| |
"கார் எழும்
தன்மை வான் செய் கதிர் புதைத்து இருள, வான்மேல்
போர் எழும் தன்மை மின்னி புயல் கிழித்து இடிகள் ஆர்ப்ப,
நேர் எழும் தன்மை பூங்கா நிரய நேர் வெருவு வீங்க,
சூழ் எழும் தன்மைத்து அஞ்சா துளங்கினான், வயிர நெஞ்சான். |
|