|
"கருமேகங்கள்
எழுந்த தன்மையாக வானில் ஒளி செய்யும்
கதிரவனை மறைத்து இருள் கவியவும், வானத்தின் மேல் போர் எழுந்த
தன்மையாக மின்னி மேகத்தைக் கிழித்துக்கொண்டு இடிகள் முழங்கவும்,
அதற்கு ஒத்து எழும் தன்மையாக அப் பூஞ்சோலை நரகத்துக்கு நிகரான
அச்சம் மேலோங்கி நிற்கவும், வயிர நெஞ்சம் கொண்ட நீபகன் துன்பம்
எழுந்து நின்ற இத்தன்மைக்கெல்லாம் அஞ்சாது விளங்கினான்.
| 52 |
உன்னிய
தவத்தைப் பேண வொழிந்ததீ யினிமை வெஃகேன்
றுன்னிய விடுக்க ணஞ்சேன் சுருதியி தெனக்கென் றோங்கி
மன்னிய துணிவிற் றோர்த்த மண்ணைகள் நரகில் வீழ்க
மின்னிய வடிவை வாளால் வியன்றரு வீழக் கொய்தான். |
| |
"'உன்னிய தவத்தைப்
பேண, ஒழிந்த தீ இனிமை வெஃகேன்;
துன்னிய இடுக்கண் அஞ்சேன்; சுருதி இது எனக்கு' என்று ஓங்கி,
மன்னிய துணிவில், தோர்த்த மண்ணைகள் நரகில் வீழ்க,
மின்னிய வடிவை வாளால் வியன் தரு வீழக் கொய்தான். |
"நீபகன், 'நான்
கருதிக் கைக்கொண்ட தவத்தைப் பேணும்
பொருட்டு, முன் விட்டொழித்த தீய இன்பத்தை விரும்பேன்; அதனால்
வந்து சேர்ந்த துன்பத்திற்கு அஞ்சேன்; இதுவே எனக்கு வேதமாகும்"
என்று எழுச்சி கொண்டு, நிலைபெற்ற துணிவோடு, தோற்ற அப்பேய்கள்
நரகத்தில் விழுமாறு, மின்னிய தன்மையாய் வடிக்கப்பட்ட கூர்மையான
வாளால் அப்பெரிய சந்தன மரம் விழுமாறு வெட்டித் தள்ளினான்.
தோர்த்தல்
- 'தோற்றல்' என்பதன் மாற்று வடிவம், 'வீழ்க' என்பது
'வீழ' எனும் எச்சப் பொருளில் ஆளப்பட்டுள்ளது.
| 53 |
கொல்வினை
யலகை போய்த்தற் கொள்கையிற் கானந்
தோன்றிப்
புல்வினை யறுப்ப நோற்றான் பொலிந்த நீ பகனென் பானே
நல்வினை பகைத்த பேய்கள் நயமொடு வெருவு காட்டி
மல்வினை யொழிக்க வோர்ந்த மாயையே யின்று மெஞ்சா, |
|