|
இரண்டாம் அடி
இறுதியில் 'ஆல்' அசைநிலை. 'வரை வித்தான்' எனப்
பிறவினை வாய்பாட்டிற் கூறியதனை, 'வரைந்தான்' எனத் தன்வினையாகக்
கொள்க.
ஆணரன்
கனவு
-
மா, - - காய், - - காய், - - காய்
| 55 |
பண்கா லிசைபடுத்திப்
பகர்ந்தவுரை வளன்கேட்டு
மண்கா வலற்காய முறையிலற மலிநீரார்
விண்கா வலனருளால் வினைகொள்ளா ரெனக்காட்டத்
தண்கா வெழுதியவை சாற்றுதுமென் றுரைகொண்டான். |
| |
பண் கால் இசை
படுத்திப் பகர்ந்த உரை வளன் கேட்டு,
"மண் காவலற்கு ஆய முறையில், அறம் மலி நீரார்,
விண் காவலன் அருளால், வினை கொள்ளார் எனக் காட்ட,
தண் கா எழுதியவை சாற்றுதும்" என்று உரை கொண்டான்: |
யாழினின்று பிறக்கும்
இசைக்கு நிகராக முதியவன் சொன்ன
மொழிகளைச் சூசை கேட்டு, "மண்ணை ஆளும் மன்னனாகிய நீபகனுக்கு
நேர்ந்த முறைப்படியே, விண்ணுலக வேந்தனாகிய ஆண்டவன் அருளால்,
அறச் சார்பு நிறைந்த இயல்புடையோர் தீவினைகளைக் கைக்கொள்ளார்
என்று காட்டும் வண்ணம், குளிர்ந்த இச்சோலையில் எழுதப்பட்டுள்ள
சித்திரங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லிக் காட்டுவோம்" என்று கூறி,
பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்:
| 56 |
மின்னார் கதிர்தெளித்தீங் கோவியமாய் வேந்தெழுதிப்
பொன்னார் மணிக்குப்பை போன்றுநிழ லுமிழ்ந்திலங்கு
மின்னா ரென்குலத்து முந்தையரா மிவர்சரிதை
முன்னர் மொழிபிறழா மொழிகுதுநான் கேண்மினென்றான். |
|