பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்384

மின் ஆர் கதிர் தெளித்து ஈங்கு ஓவியமாய், வேந்து, எழுதி,
பொன் ஆர் மணிக் குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும்
இன்னார், என் குலத்து முந்தையர் ஆம். இவர் சரிதை,
முன்னர் மொழி பிறழா, மொழிகுதும் நான், கேண்மின்" என்றான்.

     "நீபகன் என்னும் மன்னன் இங்கு மின்னல் போன்ற கதிரொளி
கொண்ட வண்ணக் கலவைகளைத் தெளித்துச் சித்திரமாய் எழுதி,
பொன்னோடு கூடிய மணிக் குவியல் போன்று ஒளியை உமிழ்ந்து விளங்கும்
இவர்களெல்லாம், என் குலத்து மூதாதையர் ஆவார். இவர்கள் வரலாற்றை,
முன்னோர் எழுதி வைத்த மொழி பிறழாமல், நான் சொல்லுவேன்,
கேளுங்கள்." என்று தொடர்ந்து பேசினான்.

                 57
ஐயைஞ் நூறுதொடர் நானூற்றா றாண்டுமுனர்
பொய்யை நூறுபுகழ் பொலிவேத நெறிவழுவா
மெய்யை நூறுதவம் விளைத்தவரும் வரத்தொகையான்
மையை நூறுவப்பில் வாழ்ந்திருந்தான் யகோபென்பான்.
 
"ஐ ஐஞ் ஞூறு தொடர் நால் நூற்று ஆறு ஆண்டு முனர்,
பொய்யை நூறு புகழ் பொலி வேத நெறி வழுவா,
மெய்யை நூறு தவம் விளைத்த அரும் வரத் தொகையான்,
மையை நூறு உவப்பில் வாழ்ந்திருந்தான், யகோபு என்பான்.

     "ஐந்து ஐந்நூறோடு கூடிய நானூற்றாறு ஆண்டுகட்கு முன்னர்,
பொம்பை அழித்த புகழால் பொலிந்த வேத நெறி வழுவாமல், உடலை
வருத்திச் செய்யும் தவத்தால் விளைந்த அரிய வரங்களைத் தொகுதியாகக்
கொண்டிருந்த யகோபு என்பான், மயக்கத்தை அழித்த மகிழ்ச்சியோடு
வாழ்ந்திருந்தான்.

     5 * 500 + 406 = 2500 + 406 = 2906. யகோபு - யாக்கோபு.
இப்பகுதிக் கண் வரும் வரலாறு, ப. ஏ., ஆதியாகமம், அதிகாரங்கள்
37 - 47 காண்க.