|
| 58 |
சீரார்
புகழ்மிக்கோன் செய்தவத்தோன்
முற்கொண்ட
தாரா ரணங்களித்த தனயருமீ ரைந்துபினர்
காரார் பிற்குழலாள் களித்தீன்ற விருவரினுள்
ளேரார் மூதுனனா மாணரனென் றிவன்றானே. |
| |
"சீர் ஆர் புகழ்
மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட
தார் ஆர் அணங்கு அளித்த தனயரும் ஈர் ஐந்து, பினர்,
கார் ஆர் பின் குழலாள் களித்து ஈன்ற இருவரினுள்,
ஏர் ஆர் மூதுனன் ஆம் ஆணரன் என்ற இவன் தானே. |
"சிறப்பு நிறைந்த
புகழ் மிக்கவனும் செய்த தவப் பெருமை
உடையவனுமாகிய யகோபு முதலில் மணந்துகொண்ட மாலை போன்ற
பெண் பெற்றுத் தந்த புதல்வரும் பத்துப் பேர் பின்னும், அவன் பின்
மணந்து கொண்ட கருமேகம் போன்ற கூந்தலை உடைய இளையாள்
மகிழ்ந்து பெற்றுத் தந்த புதல்வரும் இருவர். அவ்விருவருள், ஆணரன்
என்ற இவனே அழகு நிறைந்த மூத்தவன் ஆவான்.
'முன் கொண்ட'
என்ற குறிப்பினால், மூன்றாமடியில் 'பின்'
என்றதனைப் 'பின் கொண்ட' என விரித்துக் கொள்க. என்ற + இவன் -
'என்றவிவன்' எனற்பாலது, 'என்றிவன்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று,
'இவன்' என்று சூசை ஓவிய உருவத்தைச் சுட்டிக்காட்டியதாகக் கொள்க.
பழைய உரைக் குறிப்பில், "ஆணரனெனினும், வடமொழியாற் சுசேப்பன்
எனினும் ஒக்கும்" எனக் காண்கின்றது. ஆள் + நரன் - ஆளும்நரன் -
ஆளுநன் எனக் கொள்ளுதல் அமையும், யோசேபு என்பது மூல மொழிப்
பெயர்.
| 59 |
அறங்கொண் டிவன்வளர்ந்தே யாங்குவரைந் திட்டனபோ
லுறங்கும் பொழுதீரைந் தொருமீனு மிருசுடரு
மிறங்குந் தன்மையில்வந் திறைஞ்சுவபோ லிணைத்தன்றாள்
பிறங்குங் கதிர்தவழும் பெற்றியைக்கண் டேனென்றான். |
|