|
'சுடர், என்பதனைக்
குழுப்பன்மை சுட்டிய ஒருமையாகக் கொள்க.
'உனைத் தெண்டனிடவோ' என ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. பகைத்தவர்
குழுவில் ஆணரனின் தம்பியாகிய பெஞ்சமின் இலன் என அறிக. 'யாம்'
என்னும் பொருளில் 'நாம்' என்பதைப் பயன்படுத்துவது முனிவர் மரபு
(20 : 13)
| 61 |
'தேறாப்
பகைமுற்றித் திலத்தவனை வரக்கண்டே
யீறாய்க் கண்டகன வெவன் செய்யுங் காண்மினெனா
வாறாச் சடத்தன்னா ரவனையட வோர்ந்துபினர்
கோறா கொல்வதற்குக் கூவலினுள் வீழ்த்தினரே. |
| |
"தேறாப் பகை
முற்றி, திலத்து அவனை வரக்கண்டே,
'ஈறாய்க் கண்ட கனவு எவன் செய்யும்? காண்மின்!' எனா,
ஆறாச் சடத்து அன்னார் அவனை அட ஓர்ந்து, பினர்,
கோறா கொல்வதற்குக் கூவலினுள் வீழ்த்தினரே. |
தேறாத பகை முதிர்ந்து,
ஒரு நாள் காட்டில் அவன் வரக்கண்டு,
'இவன் கண்ட கனவு இறுதியில் நம்மை என்ன செய்யும்? அதையும்
பாருங்கள்!' என்று தமக்குள் சொல்லிக்கொண்டு. அத்தமையன்மார்
தணியாத வஞ்சகத்தால் முதலில் அவனைக் கொல்ல எண்ணி பின்னர்,
அவனை கொல்லாமல் கொல்வதற் கென்று ஒரு கிணற்றினுள்
தள்ளிவிட்டனர்.
கோறா - கொல்லுதல்
எனப் பொருள்படும் 'கோறல்' என்ற
தொழிற்பெயர் பகுதி, 'கோறு' எனக் கொண்டமைந்த ஈறுகெட்ட
எதிர்மறை வினையெச்சம். கனவு + எவன் - 'கனவுவெவன்' என
வரவேண்டியது, 'கனவெவன்' என வந்தது தொகுத்தல் விகாரம்.
| 62 |
அழுவா னடிவிழுவா
னயர்ந்தொருங்கு கைகூப்பித்
தொழுவா னனிதுதிப்பான் சுழன்றேங்கி விம்முவனாம்
விழுவா னெனவுதைத்து வேங்கையனார் வெகுண்டறநூல்
வழுவா னைத்தூக்கி வற்றியதாழ் குழிப்பெய்தார். |
|