|
| 64 |
நிந்தைக்
கஞ்சாதா ராணரன்முன் னீடுடுத்த
விந்தைக் கெழுதியதூ சிற்றுதிர மேற்சிதறித்
தந்தைக் கதுகாட்டித் தம்பியுடை யோவிதெனாச்
சிந்தைக் கிரங்கினர்போற் சினப்புலியோ
செறித்தன்றார். |
| |
நிந்தைக்கு அஞ்சாதார்,
ஆணரன் முன் நீடு உடுத்த
விந்தைக்கு எழுதிய தூசு இற்று, உதிரம் மேல் சிதறி,
தந்தைக்கு அது காட்டி, 'தம்பி உடையோ இது? எனா,
சிந்தைக்கு இரங்கினர் போல், 'சினப் புலியோ
செறிந்தது!' என்றார். |
"பழிக்கு அஞ்சாத
அத்தமையன்மார், ஆணரன் முன் நெடுநாளாய்
அணிந்து வந்ததும் விந்தையான சித்திர வேலைப்பாடு அமைந்ததுமான
ஆடையைக் கிழித்து, அதன் மேல் இரத்தத்தைத் தெளித்து, அதனைத்
தந்தைக்குக் காட்டி, 'இது தம்பி அணிந்திருந்த உடைதானோ' என்று
அறியார் போல் வினவி, பின் மனம் இரங்கினர் போற் காட்டிக்
கொண்டு 'சீனமுள்ள புலியோ அவனைக் கொன்று விட்டது!' என்றனர்.
'இற்று! என்ற
தன்வினை பிறவினைப் பொருளில் நின்றது,
இவ்வாடை ஆணரணுக்குத் தந்தை சிறப்பாக அணிவித்தது:
தமையன்மார் பொறாமைக்கு மற்றொரு காரணமாகவும் அமைந்தது.
| 65 |
ஆங்கு பொறித்தபடிக்
கவைக்கேட்ட முதிர்தாதை
தீங்கு பொறித்ததுகில் திளைப்பக்கண் ணீர்பொழியப்
பாங்கு பொறித்தமுகப் பாலனுக்கன் றிரங்கியழு
மீங்கு பொறித்தமுறை காண்மினென்றா
னிணர்க்கொடியான். |
| |
"ஆங்கு பொறித்த
படிக்கு, அவை கேட்ட முதில் தாதை,
தீங்கு பொறித்த துகில் திளைப்பக் கண்ணீர் பொழிய,
பாங்கு பொறித்த முகப் பாலனுக்கு அன்று இரங்கி அழும்;
ஈங்கு பொறித்த முறை காண்மின்" என்றான்
இணர்க் கொடியான். |
|