பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்390

     "ஆங்கே தீட்டியுள்ள முறைப்படி, அவற்றைக் கேட்ட முதிய
தந்தை, நேர்ந்த தீங்கைக் காட்டிய அவ்வாடை நனையுமாறு கண்ணீர்
பொழிந்து, அழகு பொறிக்கப்பட்ட முகமுள்ள அப்பாலனுக்காக அன்று
இரங்கி அழுவான்; அதனை இங்கே தீட்டியுள்ள முறையும் பாருங்கள்"
என்று மலர்க் கொடியை உடைய சூசை காட்டிச் சொன்னான்.

     'ஆங்கு, ஈங்கு' என்ற சுட்டுச் சொற்கள் முன் வல்லினம் மிகாமை
முனிவர் தனி மரபு.

                ஆணரனும் அரிவை பழியும்

     - விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா.

                       66
ஏங்கெழு மொலியோ டியாவரு மிரங்க வினமணித் தவிசின்மே
                                          
லெழுந்து
தூங்கெழு நுரையம் பூந்துகில் குழையத் துளிமதுப் புயற்குழல்
                                          
குழையப்
பாங்கெழு மணிகள் குழையவாய் குழையப் பதுமவாண் முகநலங்
                                          
குழைய
வாங்கெழு தியபொற் சாயலா ளாரென் றதிட்டன்கேட்
                               
டிவைவளன் சொன்னான்.
 
ஏங்கு ஏழும் ஒலியோடு யாவரும் இரங்க, "இன மணித் தவிசின்
                                        மேல் எழுந்து,
தூங்கு எழு நுரை அம் பூந் துகில் குழைய, துளி மதுப் புயல்
                                        குழல் குழைய,
பாங்கு எழு மணிகள் குழைய, வாய் குழைய, பதும வாள் முக
                                        நலம் குழைய,
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர்?" என்று அதிட்டன் கேட்டு,
                                 இவை வளன் சொன்னான் :

     அது கண்டு, முனிவர் யாவரும் ஏக்கங் கொண்டு எழும் ஒலியோடு
இரங்க, அதிட்டன், "பல இன மணிகள் பதித்த மெத்தை மேல் அமர்ந்து,
தொங்கலாக அணிந்த நுரை போல் மெல்லிய அழகிய பூ வேலைப்பாடுள்ள
தன் ஆடை குழையவும், அணிந்த பூக்கள் தேனைப் பொழியும் மேகக்
கருங்கூந்தல் குழையவும், பாங்காய் அணிந்துள்ள மணிவடங்கள் குழையவும்,
தன் வாய் குழையவும், தாமரை மலர் போன்ற ஒளியுள்ள முகத்தின் அழகு
குழையவுமாக, அங்கே தீட்டப் பெற்றுள்ள பொன் போன்ற சாயல் கொண்ட
பெண் யார்?" என்று கேட்கவே சூசை இவற்றைச் சொல்லத் தொடங்கினான்.