பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்391

                     67
விரையுமிழ் நெடுங்கான் வாணிகர் கடந்து விளைதிரு
                               
  வெசித்துநா டடைந்து
வரையுமி ழுயிர்ப்பென் றகிற்புகை யுமிழ்ந்த மாடநீள்
                                 
கோனகர் தன்னிற்
சிரையுமிழ் கனிசொல் லாணரன் சென்று திருத்தகும்
                              
   பூத்திபாற் காளாய்ப்
புரையுமிழ் துயர்நீத் தறத்துணை பிரியா புவிநுதற் றிலதமாய்
                                 
வளர்ந்தான்.
 
"விரை உமிழ் நெடுங் கான் வாணிகர் கடந்து, விளைதிரு எசித்து
                                   நாடு அடைந்து,
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள்
                                   கோன் நகர் தன்னில்,
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று, திருத் தகும் பூத்திபாற்கு
                                   ஆள் ஆய்,
புரை உமிழ் துயர் நீத்து, அறத் துணை பிரியா, புவி நுதல் திலதமாய்
                                   வளர்ந்தான்.

     "விலை கொண்ட அவ்வணிகர் மலர் மணம் பொழியும் நெடிய
காட்டைக் கடந்து, செல்வம் விளையும் எசித்து நாட்டை அடைந்தனர்.
வீணை நரம்பு பொழியும் ஒலி போன்ற கனிந்த சொல் கொண்ட ஆணரனும்
அவர்களோடு சென்றான். அங்கு, மலை விடும் மூச்சைப் போன்று அகிற்
புகை பரந்த மாளிகைகள் நெடிது கொண்ட அரசன் வாழும் தலைநகரில்,
செல்வம் மிக்க பூத்திபான் என்பவனுக்குப் பணிமகனாக விற்கப்பட்டு, பாவம்
விளைவிக்கும் துயரமெல்லாம் நீங்கியும், அறத்தின் துணையைப் பிரியாமற்
கொண்டும், நிலமகளின் நெற்றிப் பொட்டு போல் வளர்ந்து வந்தான்.