|
| 68 |
திடம்புனைந்
தமைந்த வறந்தரும் பயனே செய்தவர்க்
கன்றியு
மவர்தம்
புடம்புனைந் தவர்க்கும் வான்சுட ரொளியாற் பூமியு
மொளிர்ந்தெனத்
தகுமால்
படம் புனைந் தென்ன வாணரா ணரனப் பதியகத் தெய்திய
பின்னர்
தடம்புனைந் துயரப் பூத்திபான் றானுஞ் சால்புயர் திருப்பய
னடைந்தான். |
| |
"திடம் புனைந்து
அமைந்த அறம் தரும் பயனே, செய்தவர்க்கு
அன்றியும்,
அவர் தம்
புடம் புனைந்தவர்க்கும், வான் சுடர் ஒளியால் பூமியும் ஒளிர்ந்து
என,
தகும் ஆல்;
படம் புனைந்து என்ன, ஆணர் ஆணரன் அப் பதி அகத்து
எய்திய பின்னர்,
தடம் புனைந்து உயர, பூத்திபான், தானும், சால்பு உயர் திருப்
பயன் அடைந்தான். |
"வானத்திலுள்ள
பகலவன் ஒளியால் பூமியும் ஒளிர்வது போல,
உறுதிநிலை பொருந்தி அமைந்த புண்ணியம் தரும் பயன், அதனைச்
செய்தவர்க்கன்றியும், அவர்தம் இடம் பொருந்தியவர்க்கும்
பயன்தரத்தக்கதாம்; இச்சித்திரத்தில் தீட்டியுள்ளமை போல, நன்மை
பொருந்திய ஆணரன் அப்பதியிலுள்ள இவ்வில்லத்தை அடைந்த
பின்னர், பூத்திபான் தானும் பெருமை பொருந்தி உயருமாறு, அளவு
மிக்கு உயர்ந்த செல்வப் பயனை அடைந்தான்.
இரண்டாமடி இறுதிக்கண்
'ஆல்' அசைநிலை.
| 69 |
பாணெறி
வழுவா தாடலே யின்பம் பயக்குமா முடவர்க்கும் போலக்
கோணெறி வழுவா திலங்கறத் தொகுதி குணிக்கரு மாணரன் மாட்சி
சேணெறி வழுவா நாய்கனே கண்டு சிறந்தவன் பியல்பிலோர் மகவின்
மாணெறி வழுவா திருந்திய செல்வ மனையெலா மவன் கையிற்
பணித்தான். |
|