பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்393

"பாண் நெறி வழுவாது ஆடலே இன்பம் பயக்கும் ஆம் முடவர்க்கும்
                                        போல,
கோள் நெறி வழுவாது இலங்கு அறத் தொகுதி குணிக்க அரும்
                                                 ஆணரன் மாட்சி
சேண் நெறி வழுவா நாய்கனே கண்டு, சிறந்த அன்பு இயல்பில், ஓர்
                                             மகவின்
மாண் நெறி வழுவா, திருந்திய செல்வம் மனை எலாம் அவன் கையில்
                                                 பணித்தான்.

     "பாடலின் இயல்பு வழுவாத முறையில் ஆடும் நடனம் முடவர்க்கும்
இன்பம் பயப்பது போல, அறக் கொள்கை நெறி வழுவாது இலங்கும்
புண்ணியத் தொகுதி கணக்கிடற்கரிய ஆணரனின் மாண்பு நெடுங்காலம்
நெறி வழுவாது அமைந்திருத்தலை அத்தலைவனே நேரிற் கண்டு, சிறந்த
அன்பின் இயல்போடு, ஒரு மகனுக்குரிய மாண்பான தரம் வழுவாத
முறையில், தனது நிறைந்த செல்வத்தையும் இல்லத்தையும் எல்லாம் அவன்
கையில் ஒப்படைத்தான்.

     'முடவர்' என்ற உவமையால், பூத்திபான் அறவாழ்வு நடத்தியவன்
அல்லனெனினும், அதனை அறிந்து பாராட்டும் உளம் படைத்தவனென்று
கொள்க. 'குணிக்க + அரும்' - 'குணிக்கவரும்' என வரவேண்டியது,
'குணக்கரும்' என வந்தது தொகுத்தல் விகாரம்.

                      70
தோள்கடைந் தழுத்தி யணிமணிச் சாயற் றுளங்கிய வாணரன்
                               
மாமை
வாள்கடைந் தழுத்தி மதர்விழி நாய்கி மருளுறக் கண்டுகண்
                               
டுளத்தை
வேள்கடைந் தழுத்தி யேவிய கணையால் விருப்புறிக்
                               
கற்பெழில் சோரக்
கோள்கடைந் தழுத்திக் கொழுஞ்சுதைக் கோலங் கொண்டமட்
                               
பாவையோ டொத்தாள்.