|
"தோள் கடைந்து
அழுத்தி அணி மணிச் சாயல் துளங்கிய ஆணரன்
மாமை,
வாள் கடைந்து அழுத்தி மதர் விழி நாய்கி, மருள் உறக் கண்டு
கண்டு, உளத்தை
வேள் கடைந்து அழுத்தி ஏவிய கணையால் விருப்பு உறி, கற்பு
எழில் சோர,
கோள் கடைந்து அழுத்தி கொழும் சுதைக் கோலம் கொண்ட மண்
பாவையோடு ஒத்தாள். |
"வாளைக் கடைந்து
அழுத்தியது போன்று உயிரூட்டமுள்ள
கண்களைக் கொண்ட தலைவியோ, தோள்களைக் கடைந்து அழுத்தியது
போன்ற அழகிய மணிச் சாயலோடு விளங்கிய ஆணரனின் அழகை
மயக்க உணர்வோடு நோக்கி நோக்கி, மன்மதன் தன் உள்ளத்தைக்
கடைந்து அழுத்தி ஏவிய மலர் அம்பினால் விருப்பம் கொண்டு, தன்
கற்பின் அழகு சோரவே, விண்மீன்களைக் கடைந்து அழுத்திக்
கொழுமையான சாந்தினால் கோலம் செய்யப்பட்ட மண் பொம்மைக்கு
ஒப்பானாள்.
| 71 |
பணிநிறத்
தருகின் மருவிட விளித்துப் பணித்தவை யவன்செயுங்
காலை
மணிநிறத் தலர்ந்த வாணரன் முகத்தின் மயனிறத் தருந்திய
நஞ்சாற்
பிணிநிறத் தெழுந்த விரகநோ யாற்றா பெண்மையின் காணியா
நாண
மணிநிறத் தமைந்த சால்பினாற் பேசா வயர்ந்துநெட் டுயிர்ப்பொடு
சோர்வாள். |
| |
"பணி நிறத்து
அருகில் மருவிட விளித்து, பணித்தவை அவன் செயும்
காலை,
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தின் மயல் நிறத்து அருந்திய
நஞ்சால்
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா, பெண்மையின் காணி ஆம்
நாணம்
அணி நிறத்து அமைந்த சால்பினால் பேசா அயர்ந்து, நெட்டு
உயிர்ப்பொடு
சோர்வாள். |
|