பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்395

     "ஏதேனும் ஒரு பணியைச் சாக்கிட்டு அவனைத் தன் அருகில்
வந்துசேர அழைத்து, தான் கட்டளையிட்டவற்றை அவன் செய்து
கொண்டிருக்கும் வேளையில், மணியின் தன்மையாய் மலர்ந்த அவ்வாணரன்
முகத்து அழகால் ஏற்பட்ட மயக்கத்தின் தன்மையாய் அருந்திய நஞ்சினால்,
நோயின் தன்மையாக எழுந்த காம நோயைத் தாங்கமாட்டாமலும்,
பெண்மையின் சொத்தாகிய நாணம் அணிந்த தன்மையால் அமைந்த
மேன்மையால் அதனைச் சொல்லமாட்டாமலும் அயர்ந்து, பெருமூச்சோடு
சோர்ந்தாள்.

                       72
வீங்கிய வுயிர்ப்பிற் பொங்கிய காம வெந்தழல் வீக்கலு மாற்றா
தேங்கிய தன்மை விரைகமழ் மதுப்பெய் யிளமுகைச்
சேக்கையிற்
                                        சாய்ந்து
தாங்கிய தோட்டி யழுத்திவெல் பாகற் சாய்த்துவீழ்த் துவாவென
                                   
     நாணம்
நீங்கிய வவாவுட் பொங்கலின் விளித்த நினைவுண ராதவன்
                                   
     சேர்ந்தான்.
 
"வீங்கிய உயிர்ப்பின் பொங்கிய காம வெந் தழல் வீக்கலும், ஆற்றாது
ஏங்கிய தன்மை, விரை கமழ் மதுப் பெய் இள முகைச் சேக்கையில்                                            சாய்ந்து,
தாங்கிய தோட்டி அழுத்தி வெல் பாகன் சாய்த்து வீழ்ந்து உவா என,
                                                நாணம்
நீங்கிய அவா உள் பொங்கலின் விளித்த நினைவு உணராது, அவன்                                            சேர்ந்தான்.

     "வீங்கிய பெருமூச்சோடு பொங்கிய காமமாகிய கொடிய
நெருப்புப் பெருகவும், அதனைத் தாங்கமாட்டாது ஏங்கிய தன்மையாக,
மணம் கமழும் தேனைப் பொழியும் இளமொட்டுகள் பரப்பிய படுக்கையில்
சாய்ந்து, தன் கையில் தாங்கிய அங்கு சத்தை அழுத்தி வெல்ல முயலும்
பாகனை வீழ்த்திய யானைபோல, நாணம் நீங்கிய காம இச்சை உள்ளே
பொங்கியமையால் தன்னை அவள் அழைத்த நோக்கம் உணராமல், அவன்
அவள் பக்கம் சென்று சேர்ந்தான்.