|
| 73 |
பார்த்தனள்
பார்த்த வுவப்பொடு நாணிப் பகைத்ததா
ணமுஞ்சினந்
தாற்போற்
கூர்த்தனல் பொங்கி முகமெலாஞ் சிவந்து குயிலினுங் குழலினு
மினிதாய்
நீர்த்தன குதலைச் சொற்கொடு நெடுநா ணினைத்தவை
மறைவறச்
சொன்னா
ளார்த்தன லிடிபட் டனையநின் றனபின் பாணர னாணிநொந்
துரைத்தான். |
| |
"பார்த்தனள்;
பார்த்த உவப்பொடு நாணி, பகைத்த நாணமும்
சினந்தாற் போல்,
கூர்த்து அனல் பொங்கி, முகம் எலாம் சிவந்து, குயிலினும்
குழலினும் இனிதாய்
நீர்த்தன குதலைச் சொல் கொடு, நெடு நாள் நினைத்தவை மறைவு
அறச் சொன்னாள்.
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு, ஆணரன்,
நாணி நொந்து உரைத்தான் : |
"அருகே வந்தவனை
அவள் பார்த்தாள்; பார்த்த போது கொண்ட
மகிழ்ச்சியினிடையே சிறிது நாணி, பின் தன்னைப் பகைத்த அந்நாணத்தின்
மீதும் சினம் கொண்டவள் போல், காம நெருப்பு மிகுந்து பொங்கி,
அதனால் முகமெல்லாம் சிவந்து குயிலை விடவும் புல்லாங்குழலை விடவும்
இனிதாய் அமைந்த மழலைச் சொல் கொண்டு, தான் நெடுநாள்
நினைத்தவற்றை மறைவில்லாமல் அவனுக்குச் சொன்னாள். ஆணரன்,
நெருப்புள்ள இடிமுழக்கத்தோடு தன்மீதுபட்டதுபோன்று செயலற்றுச் சிறிது
நின்ற பின்பு, நாணியும் நொந்தும் பின்வருமாறு சொல்லலானான் :
| 74 |
ஆர்முகத்
தெனக்கோ ரையனா நாய்க னனைத்துமே யுனையலா
லளித்த
சீர்முகத் தின்னா தவற்குநான் கருதச் சிந்தையு மியலுமோ
வென்றிப்
போர்முகத் தோடி யொளித்தனர் வெற்றி புணர்ந்துய்வா
ரென்னவுட்
டேறிக்
கார்முகத் தொளித்த மின்னென வொல்கிக் கரந்துய்யல்
கருதினான்
மாதோ. |
|