|
"ஆர் முகத்து
எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன், அனைத்துமே
உனை அலால் அளித்த
சீர் முகத்து, இன்னாது அவற்கு நான் கருதச் சிந்தையும் இயலுமோ?'
என்று, இப்
போர் முகத்து ஓடி ஒளித்தனர் வெற்றி புணர்ந்து உய்வார் என்ன
உள் தேறி,
கார் முகத்து ஒளித்த மின் என ஒல்கிக் கரந்து உய்யல் கருதினான்
மாதோ. |
"'ஆர்வத் தன்மையால்
எனக்கு ஒரு தந்தையுமாகிய தலைவன்,
உன்னைத் தவிர மற்றவற்றையெல்லாம் என் கையில் ஒப்படைத்த சிறப்பு
நோக்கி, அவனுக்குப் பொல்லாங்கு ஒன்றை நான் மனத்தாலும் கருத
இயலுமோ?' என்று கூறி, இக்காமப் போரின் முன் ஓடி ஒளித்தவரே
வெற்றி பொருந்தி மீள்வரென்று உளத்தில் தெளிந்து, கருமேகத்தினிடையே
மின்னி மறைந்த மின்னல் போல ஒடுங்கி மறைந்து தப்புதலைக் கருதினான்.
'மாதோ' அசைநிலை.
'ஆர்வம்' என்பது, 'ஆர்' எனக் குறைந்து
நின்றது. இப்பாட்டின் கருத்து 4 : 21, 28 : 46, 155 ஆம் பாடல்களிலும்
வருவதைக் காண்க.
| 75 |
பூங்கணை
யாயென் னெஞ்சமீர்த் தனபின் புகர்விழி
யொளிப்பவோ
வென்னா
ஓங்கணை யையென் றொழிந்துபாய்ந் தவன்றன் னுடைத்துகில்
சிக்கெனப்
பிடித்தாள்
பாங்கணை துகிலும் பகையென வெறிந்து பகழியும் பின்றமுன்
னோடித்
தீங்கணை மடவாட் கிரங்கிய தல்லாற் செயிர்நசைக் கிரங்கிலா
தானான். |
| |
"'பூங் கணையாய்
என் நெஞ்சம் ஈர்ந்தன பின், புகர் விழி
ஒளிப்பவோ!' என்னா,
ஓங்கு அணை ஐ என்று ஒழிந்து பாய்ந்து, அவன் தன் உடைத்
துகில் சிக்கெனப்
பிடித்தாள்.
பாங்கு அணை துகிலும் பகை என எறிந்து, பகழியும் பின்ற முன் ஓடி,
தீங்கு அணை மடவாட்கு, இரங்கியது அல்லால், செயிர் நசைக்கு
இரங்கு இலாது ஆனான்.
|
|