பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்399

                    77
வேட்கையுஞ் சிதைந்த நாணமுஞ் சோர்ந்த மேனியே
                            
யறத்திற்சோர்ந் தென்னப்
பூட்கையு மெஞ்சக் கொடியவெஞ் சினத்தாள் புருடன்முன்
                            
குழனலஞ் சிந்திப்
பீட்கையு மிருகண் புதைத்தழு திந்தோ பிரியநின் றொழும்பனே
                            
யெந்தம்
வாட்கையும் புகழு மெஞ்சவின் றென்னை வழுவுற நிளைத்தன
                            
னென்றாள்.
 
"வேட்கையும் சிதைந்த நாணமும் சோர்ந்த மேனியே, அறத்தின்
                               சோர்ந்து என்னப்
பூட்கையும் எஞ்ச, கொடிய வெஞ் சினத்தாள், புருடன் முன், குழல்
                               நலம் சிந்தி,
பீள் கையும் இரு கண் புதைத்து அழுது, 'இந்தோ, பிரிய நின்
                               தொழும்பனே, எம் தம்
வாட் கையும் புகழும் எஞ்ச, இன்று என்னை வழு உற நினத்தனன்!'
                               என்றாள்.

     "ஆணரன் மீது மிகக் கொடிய சினம் கொண்ட அவள், காம
வேட்கையாலும் அது நிறைவேறாத நாணத்தாலும் சோர்ந்து தன் உடலே,
கற்பறத்தைக் காக்கும் பொருட்டுச் சோர்ந்தது போல் மேன்மை குறையக்
காட்டி, தன் கூந்தல் அழகையும் சிதைத்து, பயிர்ப்பொதி போன்ற
கைகளால் தன் இரு கண்களையும் பொத்திக்கொண்டு, கணவன்
முன்போய் அழுது, 'இதோ, நீ விரும்பும் ஊழியனே, எம் வாழ்க்கையும்
புகழும் கெடுமாறு, என்னைக் களங்கமாக்க நினைத்தான்!' என்றாள்.

     அச் செயலைக் கூறவும் நாணிய கற்பரசி போல், 'வழுவுற
நினைத்தனன்,' என்று கூறி, அச்செயலைப் பெற வைத்தாள். வாட்கை -
வாழ்க்கை; எதுகை நோக்கித் திரிந்தது.