பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்400

                      78
முற்றுபு கனன்ற முகத்தெழும் வெகுளி முரட்கொடு பூத்திபா
                                    னார்த்துப்
பற்றுபு சிறையிற் கதுமெனப் பெய்மின் பகைவரிற் கொடியனை
                                    யென்னச்
சொற்றுபு கொடியார் மாசிலா ணரனைச் சுளித்தடித் திழிவுறக்
                                    கச்சிற்
சுற்றுபு கொடுபோய்ச் சிறையினுட் டிங்கள் துளிமுகிற்
                                    புக்கெனப் புக்கான்.
 
"முற்றுபு கனன்ற முகத்து எழும் வெகுளி முரண் கொடு, பூத்திபான்,
                                     ஆர்த்து,
'பற்றுபு சிறையில் கதும் எனப் பெய்மின், பகைவரின் கொடியனை!'
                                     என்னச்
சொற்றுபு, கொடியார், மாசு இல் ஆணரனைச் சுளித்து அடித்து,
                                     இழிவு உறக் கச்சின்
சுற்றுபு கொடு போய், சிறையினுள், திங்கள் துளி முகில் புக்கு என,
                                     புக்கான்.

     "பூத்திபான் அது கேட்டு, முற்றி எரிந்த தன் முகத்தில் எழும்
சினத்தினால் மாறுபாடு கொண்டு முழங்கி, 'பகைவரைக் காட்டிலும்
கொடியவனாகிய ஆணரனைப் பிடித்து, விரைவாகச் சிறையில் இடுங்கள்!"
என்று சொன்னான். சொன்னதும், கொடிய காவலர், மாசற்ற ஆணரனைச்
சினத்தோடு அடித்து, இழிவடையக் கச்சைகளாற் சுற்றிக் கட்டி இழுத்துக்
கொண்டு போயினர். இவ்வாறு, துளி பொழியும் கருமேகத்தினுள் மதி
புகுந்து மறைந்தது போல் அவன் சிறை புகுந்தான்.

                      79
மின்னிறத் திங்க ணெழுதிய மங்கை விளம்பிய மங்கைதா
                                         னங்கண்
கன்னிறத் தரியிற் கொடியரே சிறைசெய் கசடில வாணர
                                         னெழுதி
யின்னிறத் திலங்கக் காண்மினீ ரென்ன விவைவள னிசைத்துளி
                                         யெவருஞ்
சொன்னிறத் தழன்று பெண்மையைப் பெண்மை சொற்றிலீர்
                                கொடியதே யென்றார்.