|
"மின் நிறத்து
இங்கண் எழுதிய மங்கை விளம்பிய மங்கை தான் அங்கண்,
கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய் கசடு இல ஆணரன் எழுதி,
இன் நிறத்து இலங்கக் காண்மின் நீர்" என்ன, இவை வளன் இசைத்த உளி,
எவரும்
சொல் நிறத்து அழன்று, "பெண்மையைப் பெண்மை சொற்றிலீர்; கொடியதே!"
என்றார். |
"ஒளி பொருந்திய
நிறத்தோடு இங்கு வரையப்பட்டுள்ள பெண்
அப்பெண்னேதான். அங்கு கல் நெஞ்சங் கொண்ட சிங்கத்தினும் கொடிய
காவலர் சிறை செய்த குற்றமற்ற ஆணரன் வரையப் பட்டு, இனிமை தரும்
நிறத்தோடு இலங்குவதையும் நீங்கள் பாருங்கள்" என்று காட்டி, சூசை
இவையெல்லாம் சொன்னபோது, கேட்ட முனிவர் யாவரும், அச் சொல்லைக்
கேட்ட அளவால் கொதித்து. "பெண்மையைப் பெண்மையென்று
சொல்லாதீர்; பெண்மையே கொடியது!" என்றனர்.
'கொடியது' என்றது,
கொடிதான பேய்மையைக் கருதியது. இசைத்த +
உளி - 'இசைத்தவுளி' எனற் பாலது. தொகுத்தல் விகாரமாய், 'இசைத்துளி'
என நின்றது.
| 80 |
மடநடை பெண்மை
நட்பென வுரைத்தார் வளருணர் வுயரிய நீரார்
தடநடை நிகரா னிழிவுறி யெஞ்சச் சால்பவ ளன்புகாட் டியபின்
விடநடை வஞ்சத் தடும்பகை செய்தாள் வினையிதே லினிதெனப்
பெண்மை
படநடை யெழிலை விரும்பிலீ ரென்னப் பாணிக மாமுனி சொன்னான். |
| |
"மட நடை பெண்மை
நட்பு என உரைத்தார், வளர் உணர்வு உயரிய நீரார்.
தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச, சால்பு அவள் அன்பு காட்டிய பின்,
விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள்; வினை இதேல், இனிது என,
பெண்மை
பட நடை எழிலை விரும்பிலீர்!" என்னப் பாணிக மாமுனி சொன்னான். |
|