பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்403

                  அரசன் கண்ட கனவு

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.

              82
நறைபட் டாவிசெய் நல்லகில் வெந்தகால்
சிறைபட் டச்சிறை பட்டில தேரறத்
துறைபட் டாணரன் றானுந்து ளங்கினான்
குறைபட் டாரெவர்க் குங்குறை யாற்றினான்.
 
"நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த கால்;
சிறை பட்டு, அச்சிறை பட்டு இல, தேர் அறத்
துறை பட்டு, ஆணரன், தானும் துளங்கினான்;
குறைபட்டார் எவர்க்கும் குறை ஆற்றினான்.


     "அகில் நெருப்பில் வெந்த போதே தன் மணம் வெளிப்பட்டுப்
புகையை வீசும்; அதுபோல், ஆணரன், தான் சிறைப்பட்டிருந்தும்,
சிறைப்படாதவன்போல், தேர்ந்த அறநெறியில் ஈடுபட்டு, தானும்
துலங்கினான்; அங்குக் குறைப்பட்டு நின்றவர் எவர்க்கும் குறையும்
தீர்த்தான்.

     'செய்யும்' என்னும் வினைமுற்று, இடைக்குறையாய்ச் 'செய்ம்'
என்று ஆகி, புணர்ச்சியில் மவ்வீறு கெட்டு 'செய்' என நின்றது.

            83
தேரெ ழுஞ்சுடர் சேரிட மவ்விடம்
பேரெ ழுங்கதிர் பெற்றுவி ளங்குமா
லேரெ ழுங்கதி வீட்டினின் னானுறை
சூரெ ழுஞ்சிறை தோன்றிய தாமரோ.
 
"தேர் எழும் சுடர் சேர் இடம் அவ் இடம்
பேர் எழும் கதிர் பெற்று விளங்கும் ஆல்;
ஏர் எழும் கதி வீட்டின், இன்னான் உறை
சூர் எழும் சிறை, தோன்றியது ஆம் அரோ.