பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்404

     "தேரில் எழுந்து வரும் கதிரவன் சேர்ந்த இடமாகிய
அவ்விடமெல்லாம்அதினின்று எழும் பெருங் கதிரொளியைத் தானும் பெற்று
விளங்கும்; அதுபோல், இவன் வாழ்ந்த துன்பம் பொருந்தும் சிறையும், அழகு
விளங்கும் மோட்ச வீடுபோல் தோன்றியது.

     ஆல் - அம் - அரோ: அசைநிலைகள்:

             84
ஒளிப டப்பசும் பொன்னுலை பெய்தெனத்
தெளிப டச்சிறை பெய்தன வாணரன்
களிப டக்கருத் தேந்திய காட்சியா
லளிப டக்கனிந் தும்பரொத் தாயினான்.
 
"ஒளி படப் பசும் பொன் உலை பெய்து என,
தெளி படச் சிறை பெய்தன ஆணரன்,
களி படக் கருத்து ஏந்திய காட்சியால்
அளிபடக் கனிந்து, உம்பர் ஒத்து ஆயினான்.

     "பசும் பொன்னை அதன் ஒளிமிகுமாறு உலையில் இட்டது போல்,
தானும் தெளிவு பெறுமாறு சிறையிடப்பட்ட ஆணரனும் தன் உணர்வில்
களிப்பு ஏற்படுமாறு கொண்ட அறிவுக் காட்சியால் இறைவன் அருள்
தன்னை வந்தடைந்தமை கண்டு கனிந்து, வானவர்க்கு நிகராய்
விளங்கினான்.

             85
நீர்பு தைத்தொளி நேமியெ ழுந்தவிர்
சீர்பு தைத்த சிறைநெடு நாளுறீஇ
யேர்பு தைத்தவிவ் வோவியத் தீங்கவன்
கார்பு தைத்தமி னொத்தெழக் காண்மினே.
 
"நீர் புதைத்து ஒளி நேமி எழுந்து அவிர்
சீர் புதைத்த சிறை நெடு நாள் உறீஇ,
ஏர் புதைத்த இவ் ஓவியத்து ஈங்கு, அவன்
கார் புதைத்த மின் ஒத்து எழக் காண்மினே!