|
"மன்னன் மனம்
குலையவும், கனவு நூல் அறிந்த பெரியோர் தம்முள்
முரணவும், முன் சிறையில் இருந்து மீண்ட மைக்குணன் என்பவன்,
'கலையறிவில் திங்கள் போல, ஆணரன் பொருள் கண்டு அறிவானாதலின்,
வருந்த வேண்டியதில்லை' என்று கூறி, மேலும் தொடர்ந்து கூறினான்:
| 88 |
தூய தன்மையு
ளத்துறுங் காட்சியா
லாய தன்மையி லாவத றிந்துளாய்த்
தீய தன்மையி லாசிறை பட்டுறை
நேய வாணரற் கூவுமி னீரென்றான். |
| |
"'தூய தன்மை
உளத்து உறும் காட்சியால்,
ஆய தன்மையில், ஆவது அறிந்து உளாய்,
தீய தன்மை இலா, சிறை பட்டு உறை
நேய ஆணரற் கூவுமின் நீர்' என்றான். |
"'தூய தன்மை
கொண்ட தன் உள்ளத்தில் தோன்றும் தெய்வக்
காட்சியால், நிகழ்ந்ததை அறியும் தன்மை போல், நிகழவிருப்பதனையும்
அறிந்துள்ளவனாய், தீய தன்மை ஒன்றும் தன்பால் இல்லாமலே, சிறையில்
அடைபட்டு வாழ்பவனும் நேயனுமாகிய ஆணரனை நீங்கள் அழையுங்கள்'
என்றான்.
| 89 |
மன்ன னுட்பட
வையகம் வாழ்வுற
வன்ன வத்தெழு மெல்லையொத் தாணரன்
சொன்ன வச்சிறை நீத்துத்தொ ழக்கலன்
மின்ன மிக்கெழும் வேந்தன்வி ளம்பினான். |
| |
"மன்னன் உட்பட,
வையகம் வாழ்வு உற,
அல் நவத்து எழும் எல்லை ஒத்து, ஆணரன்
சொன்ன அச்சிறை நீத்துத் தொழ, கலன்
மின்ன, மிக்கு எழும் வேந்தன், விளம்பினான்: |
"மன்னன் இசையவே,
இவ்வையகம் நல்வாழ்வு பெறுமாறு, இரவில்
புதுமையாய் உதிக்கும் கதிரவனைப் போன்று, ஆணரன் முன் சொன்ன
அச்சிறைச் சாலையை நீங்கி வந்து, தன்னைத் தொழவே, மிக்க
ஆர்வத்தோடு எழும் மன்னன், தன், அணிகலன்கள் மின்ன, பின்வருமாறு
சொன்னான்;
|