|
'அல்நவத்து
எழும் எல்லை ஒத்து' - இல்பொருள் உவமையணி.
| 90 |
ஒளிபட்
டொள்பளிங் கொத்திழி வின்றிநீ
களிபட் டேற்றிய தேவன்செய் காட்சியாற்
றெளிபட் டீங்கிவர் தேரில கண்டவை
வெளிபட் டோதவி ளம்புவல் கேளென்றான். |
| |
"ஒளிபட்டு ஒள்
பளிங்கு ஒத்து, இழிவு இன்றி நீ
களி பட்டு ஏற்றிய தேவன்செய் காட்சியால்,
தெளி பட்டு ஈங்கு இவர் தேர் இல, கண்டவை,
வெளி பட்டு ஓத, விளம்புவல்: கேள்' என்றான்: |
"'ஞாயிறு ஒளி
பட்டு ஒளிரும் பளிங்கு போல், நீ இழிவு இன்றியும்
களிப்புக் கொண்டும் போற்றிய இறைவன் தரும் காட்சியால், இங்கு
இவரெல்லாம் தெளிவு கொண்டு தெரிந்து கூற இயலாதவற்றை நீ
வெளிப்படக் கூறுமாறு, நான் கனவிற் கண்டவற்றைக் கூறுவேன்: கேள்'
என்று, தொடர்ந்து சொல்லலானான்:
| 91 |
பூம லிந்தபொ
ழிற்கணின் மேய்ந்தவே
ழாம லிந்தது கண்டதவ் வாவெலா
மீம லிந்துமெ லிந்தபின் னேழ்பசு
காம லிந்துவி ழுங்கல்கண் டேனென்றான். |
| |
"'பூ மலிந்த
பொழில் கணின் மேய்ந்த ஏழ்
ஆ மலிந்தது கண்டது; அவ் ஆ எலாம்,
ஈ மலிந்து மெலிந்த பின் ஏழ் பசு
கா மலிந்து விழுங்கல் கண்டேன்' என்றான். |
"'பூக்கள் நிறைந்த
ஒரு சோலையினிடத்து மேய்ந்த ஏழு பசுக்கள்
செழுமையுடன் விளங்கியது நான் முதலிற் கண்ட கனவு;
அப்பசுக்களையெல்லாம் ஈக்கள் மொய்த்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள்
அச்சோலையில் பின் வந்து நிறைந்து, செழுமையோடு விளங்கிய அவற்றை
விழுங்கவும் கண்டேன்' என்றான்.
|