|
| 96 |
மலிந்த
வாண்டினி லீட்டலு மற்றவை
மெலிந்த வாண்டில்வ குத்தலு மிக்குறும்
பொலிந்த வாண்மைபொ ருந்திடத் தேருதி
வலிந்த நாட்டுயி ராயமன் னாவென்றான். |
| |
"'மலிந்த ஆண்டினில்
ஈட்டலும், மற்று அவை
மெலிந்த ஆண்டில் வகுத்தலும் மிக்கு உறும்;
பொலிந்த ஆண்மை பொருந்திடத் தேருதி,
வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா!' என்றான். |
"செழித்து விளைந்த
ஆண்டில் சேர்த்து வைத்தலும், பின்
அவற்றையே விளையாமல் மெலிந்த ஆண்டில் பகிர்ந்தளித்தலும் மிகவே
தகும்; வலிமை வாய்ந்த இந்நாட்டுக்கு உயிராகிய மன்னனே, இது வரை
பொலிவுடன் விளங்கிய உன் ஆட்சித் திறம் நீங்காது பொருந்துதற்கு
ஆனதைத் தேர்ந்து செய்வாயாக' என்றான்.
ஆணரன்
எசித்துக்கு ஆளுநன்
- விளம்,
- மா, தேமா, - விளம், - மா, தேமா
| 97 |
"நூல்வழி
யுரைத்த தீஞ்சொல் நொய்யித ழவிழ்ந்த தேன்போல்
வல்வழி மின்கை வேந்தன் வியப்பினோ டிமிழிற் கேட்டுப்
பால்வழி நுரையம் பைம்பூப் பழித்தபொற் றுகிலைப் போர்த்து
நால்வழி யணிகள் பூட்டி நயப்பெழத் தழுவினானே. |
| |
"நூல் வழி உரைத்த
தீம் சொல், நொய் இதழ் அவிழ்ந்த தேன் போல்,
வேல் வழி மின் கை வேந்தன், வியப்பினோடு இமிழின் கேட்டு,
பால் வழி நுரை அம் பைம் பூப் பழித்த பொன் துகிலைப் போர்த்து,
நால் வழி அணிகள் பூட்டி, நயப்பு எழத் தழுவினானே. |
"தெய்வ நூல்
நெறியால் ஆணரன் கண்டு சொன்ன இனிய சொல்லை,
மின்னொளி பொழியும் வேலைக் கையில் தாங்கிய மன்னன், மெல்லிய
பூவிதழிடையே கனிந்த தேன் போல், வியப்போடும் இன்பத்தோடும் கேட்டு,
|