|
பாலினின்று வழியும்
நுரையையும் அழகிய பசிய மலரையும் பழித்த
மெல்லிய பொன்னாடையை அவனுக்குப் போர்த்தியும், நாலுவகை அணிகள்
பூட்டியும், விருப்பம் மேலோங்க அவனைத் தழுவிக் கொண்டான்.
'மின் வழி
வேல் கை வேந்தன்' என மாற்றிக் கூட்டுக, "நால்வகை
அணிகளாவன: காதணி, மார்பணி, கையணி, காலணி என்னும் இவை
நான்கும் என்க" என்பது பழையவுரை அடிக் குறிப்பு.
| 98 |
உன்னலால்
தெய்வ மல்லா லுணர்வரும் பயன்கள் சொன்னாய்
நின்னலால் பிறர்கள் யாரே நிறைந்திவை செலுத்தும் பாலா
ரென்னலால் பிறர்கள் யார்க்கு மிறைவனீ யுலகங்காக்க
மன்னலா லெவையுந் தந்தேன் வாய்ந்தநூல் வடிவோ யென்றான். |
| |
"'உன் அலால்,
தெய்வம் அல்லால், உணர்வு அரும் பயன்கள் சொன்னாய்;
நின் அலால் பிறர்கள் யாரே நிறைந்து இவை செலுத்தும் பாலார்?
என் அலால், பிறர்கள் யார்க்கும் இறைவன் நீ. உலகம் காக்க,
மன் அலால், எவையும் தந்தேன், வாய்ந்த நூல் வடிவோய்!' என்றான். |
"தழுவிய மன்னன்,
'உன்னால் அல்லாமல், ஒரு தெய்வத்தால்
அல்லாமல், வேறு யாராலும் உணர்வதற்கரிய கனவுப் பயன்கள் சொன்னாய்;
வாய்ந்த வேதநூல் வடிவம்கொண்டவனே உன்னைத் தவிர, இவையெல்லாம்
நிறைவாகக் கொண்டு செலுத்தும் தன்மை கொண்டோர் பிறர் யார்?
என்னைத் தவிர, பிறர் யாவர்க்கும் நீயே அரசன். இனிமேல் நீயே
இவ்வுலத்தைக் காக்குமாறு அரச பட்டம் தவிர, எல்லாவற்றையும் உனக்குத்
தந்தேன்' என்றான்.
'மன்'
என்றது, அரச பதவிக்கு உரிய முடி கோல் குடை என்ற
மூன்றையும் குறிக்கும். ஏனைய குடி படை முதலிய எல்லாம் ஆணரன்
ஆளுகைக்கு உட்பட்டன. 'பிறர்கள்' என்பதில் 'கள்' சாரியை.
|