பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்412

                    99
வார்வளர் முரசிற் சாற்றி வளர்சிறப் பியற்றிப் பின்னர்
போர்வளர் சேனைசூழ்கப் புகர்முகத் தெருத்திற் பைம்பொன்
னீர்வளர் தவிசி னேற்றி நிரையினீங் கெழுதப் பட்ட
சீர்வளர் வண்ணத் தங்கண் சிதைவிலான் றோன்றி னானே.
 
"வார் வளர் முரசின் சாற்றி, வளர் சிறப்பு இயற்றி, பின்னர்,
போர் வளர் சேனை சூழ்க, புகர்முகத்து எருத்தின் பைம் பொன்
நீர் வளர் தவிசின் ஏற்றி, நிரையின் ஈங்கு எழுதப்பட்ட
சீர் வளர் வண்ணத்து, அங்கண் சிதைவு இலான் தோன்றினானே.

     "மன்னன் இவையெல்லாம் வாரால் இறுக்கப்பட்ட முரசு
அறைந்து நாட்டு மக்களுக்கு அறிவித்து, அதற்கேற்ற உயர்ந்த சிறப்புக்
கொண்டாட்டம் நிகழ்த்தி, பின்னர் போருக்குரிய தன் சேனை
அணிவகுத்துச் சூழ்ந்து செல்ல, அரசு யானையின் பிடரியில் பசும் பொன்
மயமாய் உயர்ந்து நின்ற இருக்கையில் ஏற்றி நகர் வலம் செய்வித்தான்.
அறநெறி சிதைதல் இல்லாத ஆணரன், முறையாய் இங்கு வரையப்பட்டுள்ள
சிறப்புப் பொருந்திய தன்மையாய், அன்று அங்கு விளங்கித் தோன்றினான்.

     புகர் முகம் - புள்ளி முகம்; இங்குப் புள்ளி முகங் கொண்ட
யானைக்குக் காரணப் பெயராயிற்று. யானை முகத்து வெண் புள்ளி
சிறப்பின் அறிகுறி.

                      100
அருளொன்றுஞ் சார்ந்த நல்லோ னருஞ்சிறை பட்ட போழ்தும்
பொருளொன்றுஞ் செங்கோ லோச்சிப் பொருநனாய்ப் பொலிந்த
                                            போழ்தும்
மருளொன்றும் புலம்பல் தானு மகிழ்வுமுட் டோன்ற லின்றித்
தெருளொன்று முணர்வின் மிக்கோன் றிருவிள மெனவுட்
                                         டேர்ந்தான்.