"அருள் ஒன்றும்
சார்ந்த நல்லோன், அருஞ் சிறை பட்ட போழ்தும்,
பொருள் ஒன்றும் செங்கோல் ஓச்சிப் பொருநனாய்ப் பொலிந்த
போழ்தும்,
மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி,
தெருள் ஒன்றும் உணர்வின் மிக்கோன் திருவுளம் என உள்
தேர்ந்தான். |
"தெய்வத் திருவருள்
ஒன்றையே சார்ந்து நின்ற நல்லோனாகிய
ஆணரன், அரிய சிறையில் தள்ளப்பட்ட போதும், பொருட் செல்வத்தோடு
பொருந்தும் செங்கோல் செலுத்தி அரசன் போற் பொலிவுற்ற போதும்,
மயக்கத்தோடு ஒன்றும் புலம்பலும் மகிழ்ச்சியும் தன் உள்ளத்துத்
தோன்றுதலின்றி, எல்லாம் தெளிவோடு கூடும் உணர்வில் மிக்க
ஆண்டவன் திருவுளச் செயலென்று உள்ளம் தெளிந்து அமைந்தான்.
புலம்பலை முன்
நிலைக்கும் மகிழ்வைப் பின் நிலைக்கும் நிரல்
நிரலாகக் கொள்க.
101 |
பொலந்தரு
வளர்ந்த தன்மை புடையெலா நிழற்றும் போல
நலந்தரு மணிசெய் பைம்பொன் னற்றவி சுயர்ந்த தானும்
வலந்தரு செல்வத் தன்பும் வளர்ந்தெலா வுயுிர்கள் பேணி
நிலந்தரு மினிமை யுண்டு நின்றதே ழாண்டு சேர்த்தான். |
|
"பொலம் தரு
வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல,
நலம் தரு மணி செய் பைம் பொன் நல் தவிசு உயர்ந்த தானும்,
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து, எலா உயிர்கள் பேணி,
நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான். |
"அழகிய மரம்
தான் வளர்ந்த அளவிற்கேற்பத் தன் பக்கமெல்லாம்
நிழல் தருவது போல, நலம் பொருந்திய மணிகள் பதித்துப் பசும்பொன்னாற்
செய்த நல்ல இருக்கையில் உயர்ந்து நின்ற ஆணரன் தானும், தனக்கு
வெற்றியைத் தரும் செல்வத்தின் அளவிற்கேற்ப அன்பும் வளரக்கொண்டு,
|