பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்415

"பார் முழுது உண்ணும் கூர்த்த பசிதனை உண்ணும் அன்னான்,
சீர் முழுது அகன்ற அன்பின் சிறப்புற அளித்த நாடே,
சூர் முழுது அழுங்கு மற்றத் தொலைத்த நாடு உய்ய உய்தி,
தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார்.

     "உலகம் முழுவதையும் உண்ணும்படியாக மிக்கு எழுந்த பசியைத்
தானே எடுத்து உண்ணக் கூடிய அவ்வாணரன், அளவு முற்றும் கடந்த
அன்பினோடு சிறப்பாகப் பேணிய அவ்வெசித்து நாட்டையே, பசித்
துன்பத்துள் முழுதும் மூழ்கிக் கிடந்த ஏனைய தூரத்து நாடுகள் உயிர்
பிழைக்கவென்று வந்தடைந்தன. அவ்வாறே, மாலை வகைகளால் நிறைந்து
விளங்கும் மார்பு கொண்ட ஆணரனின் தமையன்மாருள் இருவரும் அங்கு
வந்தடைந்தனர்.

     பார் முழுது உண்ணும் பசியைத் தான் உண்ணுதலாவது, அது
போக்கற்குரிய உணவை உலகுக்கெல்லாம் தந்து உதவுதலாம். தொலைத்த
- தூரத்தைக் குறிக்கும் 'தொலை' என்ற சொல்லாலாகிய 'தொலைத்து'
என்ற குறிப்பு வினைப் பெயரோடு அமைந்த அகரவீற்றுப் பெயரெச்சம்.

                     104
உற்றவர் தம்மைத்தானே யுணர்ந்துகண் டிருப்பத் தன்னை
மற்றவ ருணர்கி லாமை மதித்தன னெவர் நீர் நும்மைப்
பெற்றவ ரெவரெந் நாடு பிறந்ததெத் துணையென் றோத
விற்றவர் கேட்டுத் தாளை யிறைஞ்சவீழ்ந் தொருவன்
                                     சொன்னான்.
 
"உற்றவர் தம்மைத் தானே உணர்ந்து கண்டு இருப்ப, தன்னை
மற்று அவர் உணர்கிலாமை மதித்தனன்; 'எவர் நீர்? நும்மைப்
பெற்றவர் எவர்? எந்நாடு? பிறந்தது எத்துணை?' என்ற ஓத,
விற்றவர் கேட்டுத் தாளை இறைஞ்ச வீழ்ந்து, ஒருவன்
                                         சொன்னான் :