பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்418

"வெறி பட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை,
பொறி பட்டால் அவர் பூ நையும் போல் உளம் அழுங்க வாடி,
'மறி பட்டான் மீட்க, வேண்டும் மறு உணவு அடைய, வை வேல்
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன, இள மகன் போதல்' என்றான்.

     "மணத்தோடு கூடிய தேன் நிறைந்துள்ள எசித்து நாட்டில் தன் ஒரு
மகனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கேட்டறிந்த தந்தை, மலரும் பூ தீப்பொறி
பட்டால் நைவதுபோல் உள்ளம் வருந்தி வாடி, 'மறிக்கப்பட்ட மகனை
மீட்கும் பொருட்டும், நமக்கு மறுபடியும் வேண்டிய உணவை அடையவும்,
கூர்மையான வேல் எறியப்பட்டு அருமையான உயிர் பிரிந்த தன்மையாக,
என் இளைய மகன் போவானாக' என்று இசைந்து சொன்னான்.

     'போதல்' என்ற சொல்லின் 'அல்' ஈறு, 'மக்கட்பதடி எனல்' என்ற
இடத்துப்போல வியங்கோட் பொருள் சுட்டியது.

                     108
எஞ்சநொந் தழத்தாய் தந்தை யிரிந்ததந் நாளில் வந்த
பெஞ்சமி னென்னுந் தோன்றல் பெயர்ந்து போய்ப் பவளக்
                                          குப்பை
யஞ்சமின் முகத்து நிற்ப வாணரன் முகம னோக்கி
விஞ்சவன் புருகிப் பின்னர் விருந்திவர்க் கோம்பினானே.
 
"எஞ்ச நொந்து அழ தாய் தந்தை, இரிந்த தம் நாளில் வந்த
பெஞ்சமின் என்னும் தோன்றல், பெயர்ந்து போய், பவளக் குப்பை
அஞ்ச மின்முகத்து நிற்ப, ஆணரன் முகமன் நோக்கி,
விஞ்ச அன்பு உருகி, பின்னர் விருந்து இவர்க்கு ஓம்பினானே.