"தம் வயது கடந்த
காலத்தில் வந்து பிறந்த பெஞ்சமின் என்னும்
அம்மகன், தன் தாய் தந்தையர் மிகவே நொந்து அழ அங்கிருந்து
பெயர்ந்து எசித்து போய், பவளக் குவியலும் நிகராகாது அஞ்ச மின்னும்
முகத்தோடு நின்றான். ஆணரன் அவனை ஆர்வத்தோடு நோக்கி,
அன்புமேலோங்க மனம் உருகி, பின் இவர்க்கெல்லாம் விருந்து தந்து
பேணினான்.
'இவர்க்கு'
என்றமையால், பெஞ்சமினோடு தமையரும் சென்றது
பெறப்படும்.
109 |
ஓம்பிய
விருந்தில் வைத்த வொளிமணிக் கலமு மன்னார்
சாம்பிய விலையின் பொன்னும் தம்பிகண் ணொளித்து
வைப்பக்
காம்பிய வவரும் போகிற களவர்கைப் பிடிமி னென்னக்
கூம்பிய படைவர் மொய்ப்பக் குழைவுறக் குலைந்து நின்றார். |
|
"ஓம்பிய விருந்தில்
வைத்த ஒளி மணிக் கலமும், அன்னார்
சாம்பிய விலையின் பொன்னும் தம்பிகண் ஒளித்து வைப்ப,
காம்பிய அவரும் போகில், 'களவர் கைப் பிடிமின்!' என்ன,
கூம்பிய படைவர் மொய்ப்ப, குழைவு உறக் குலைந்து நின்றார். |
"அவ்வாறு பேணிய
விருந்தில் உணவு பரிமாறி வைத்த ஒளியுள்ள
மணிகள் பதித்த பாத்திரத்தையும், அவர்கள் வாங்கிய பண்டங்களை
விலையாக ஒடுக்கித் தந்த பொன்னையும், ஆணரன் தன் தம்பியின்
பொழியினுள் ஒளித்து வைத்தான்; பொதிகளைக் கொண்டுள்ள அவர்கள்
வழியில் போய்க்கொண்டிருக்கையில், சேவகரை ஏவி, 'களவு கொண்ட
அவர்களைக் கையோடு பிடித்து வாருங்கள்", என்றான். வளைந்துகொண்ட
சேவகர் திரண்டு தடுக்கவே, அவர்கள் மணம் குழைந்து குலைந்து நின்றனர்.
110 |
புரந்தநா டொழியே மென்பார் பொதியெலா நோக்கீ ரென்பார்
கரந்தநா மல்ல வென்பார் களவனைக் கொன்மி னென்பார்
பிரந்தமா னவர்சூழ் நாடிப் பெஞ்சமி னிடைக்கள் வுண்டாய்ப்
பரந்தமா முகில்விட் டேறு பட்டென மயங்கி நின்றார். |
|