பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்420

"'புரந்த நாடு ஒழியேம்' என்பார்; 'பொதி எலாம் நோக்கீர்' என்பார்;
'கரந்த நாம் அல்ல' என்பார்; 'களவனைக் கொல்மின்!' என்பார்.
பிரந்த மானவர் சூழ் நாடி, பெஞ்சமினிடைக் கள்வு உண்டு ஆய்,
பரந்த மா முகில் விட்ட ஏறு பட்டு என மயங்கி நின்றார்.

     "அவர்கள் சேவகரை நோக்கி, 'எங்களைப் பேணிய நாட்டை
விட்டு நாங்கள் வெளியே போய் விடவில்லை' என்பர், 'எங்கள்
பொதிகளையெல்லாம் அவிழ்த்துப் பாருங்கள்' என்பர்; 'அப்படிக்
களவு செய்து மறைக்கும் குணமுடையவர்கள் அல்ல நாங்கள்' என்பர்;
'அப்படியே களவு கண்டால், அக்களவுக்கு உரியவனைக் கொன்று
விடுங்கள்!' என்பர், அப்பொழுது, அதட்டிய படை வீரர் சுற்றிலும்
ஆராய்ந்து தேடினர், பெஞ்சமினிடத்துக் களவுப் பொருள் உண்டெனக்
கண்டு, பரந்த கருமேகம் வெளிப்படுத்திய இடி தம்மேல் விழுந்தாற்
போல, அத்தமையன்மார் மயங்கி நின்றனர்.

     விட்ட + ஏறு - 'விட்டவேறு' எனற்பாலது, 'விட்டேறு' எனத்
தொகுத்தல் விகாரமாயிற்று, களவு - களவுப் பொருள், களவன் - கள்வன்.

                     111
தணர்ந்தவிம் மகனும் போகிற் றாதைதா யுய்யா ரென்பார்
புணர்ந்தவெங் கொடுமை யால்முன் புலம்பியா ணரன்கை யேற்றி
யுணர்ந்த சொற் கேளேமென்பா ருயிர்கொல்லா கொன்றே                                           மென்பார்
மணர்ந்தவெஞ் செயிர்க்கி தென்பார் வந்ததீங் குரிய தென்பார்.
 
"'தணர்ந்த இம் மகனும் போகில், தாதை தாய் உய்யார்!' என்பார்;
'புணர்ந்த எம் கொடுமையால், முன் புலம்பி ஆணரன், கை ஏற்றி,
உணர்ந்த சொல் கேளேம்!' என்பார்; 'உயிர் கொல்லா, கொன்றேம்!'                                            என்பார்;
'மணர்ந்த எம் செயிர்க்கு இது!' என்பார்; 'வந்த தீங்கு உரியது!'                                            என்பார்.