பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்421

     "மயங்கிய அத்தமையன்மார், 'அரிதின் பிரியக் கொண்ட
இம்மகனும் போய்விட்டால், தந்தை தாயர் உயிர் பிழைக்க மாட்டார்களே!'
என்பர்; 'தனக்கு நேர்ந்த எங்கள் கொடுமையினிடத்து, ஆணரன்முன்
புலம்பி, கையெடுத்துக் கும்பிட்டு, உணர்ச்சியோடு சொல்லிய சொற்களைக்
கேளாது போனோம்!' என்பர்; 'உயிரை மட்டும் கொல்லாமல், அவனைக்
கொன்றே விட்டோம்!' என்பர்; சேர்ந்து கொண்ட நம் பாவத்திற்குப்
பயனாக நேர்ந்தது இது!' என்பர்; 'வந்த தீங்கு தக்கதே!' என்பர்.

     தணந்த, மணந்த என்ற சொற்கள், எதுகைப் பொருட்டு, தணர்ந்த,
மணர்ந்த என நின்றன. 'தணர்வர்' என, எதுகைப் பயன் நோக்காதும்,
முன் 25 : 83 - ல் வந்துள்ளமை காண்க.

                      112
பேர்நலம் பொறித்த குன்றிற் பெருவிளக் காகப் பைம்பொன்
னார்நலம் பொறித்த சீய வணையிலா ணரனின் றோங்கத்
தார்நலம் பொறித்த மார்பிற் றழற்சினம் புழுங்கி னாற்போற்
கூர்நலம் பொறித்த வன்பிற் கொடுத்தநன் றொழிந்தீ ரென்றான்.
 
"பேர் நலம் பொறித்த குன்றில் பெரு விளக்கு ஆக, பைம்பொன்
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று, ஓங்கத்
தார் நலம் பொறித்த மார்பில் தழல் சினம் புழுங்கினாற் போல்,
'கூர் நலம் பொறித்த அன்பின் கொடுத்த நன்று ஒழிந்தீர்!' என்றான்.

     "ஆணரன், பேரழகு தீட்டிய குன்றின்மேல் இட்ட பெரு விளக்குப்
போல, பசும் பொன்னாற் செய்து நிறைந்த அழகு பொறித்த அரியணையில்
நிலைகொண்டு, பல வகை மாலைகளின் அழகு ஓங்கத் துலங்கிய தன்
மார்பில் நெருப்புப் போன்ற சினத்தால் புழுங்கினாற் போல், தன்முன்
வந்து நின்ற அவர்களை நோக்கி, 'மிக்க நன்மை குறித்த அன்போடு
உணவு கொடுத்து உதவிய நன்றியை இவ்வாறு கெடுத்துக் கொண்டீர்கள்!'
என்றான்.