113 |
உய்வகை
யின்றி யண்ண ருயிரிலா தடிவீழ்ந் தேற்றிப்
பொய்வகைச் செயிரி தேனும் புகரிலோர் தம்பி நோக
மைவகைக் கொடுமை யால்யாம் வஞ்சமே முடித்த பாவ
மெய்வகை பயத்த தீமை விளைந்ததின் றையா வென்றார். |
|
"உய் வகை இன்றி
அண்ணர், உயிர் இலாது அடி வீழ்ந்து ஏற்றி,
'பொய் வகைச் செயிர் இதேனும், புகர் இல் ஓர் தம்பி நோக,
மை வகைக் கொடுமையால் யாம் வஞ்சமே முடித்த பாவம்,
மெய் வகை பயத்த தீமை விளைந்தது இன்று, ஐயா!' என்றார். |
"அது கேட்ட அண்ணன்மார்
தப்ப வழியின்றி, உயிரில்லாதவர் போல்
அவன் அடியில் விழுந்து போற்றி, 'ஐயா, இது பொய்யின் வகையைச்
சார்ந்ததாய் எம்மீது சாட்டப்பட்டுள்ள குற்றமாயிருப்பினும், குற்றமே இல்லாத
ஒரு தம்பி நோகுமாறு, மயங்கிச் செய்த கொடுமையால் யாம் எமது வஞ்சகத்
திட்டத்தை முன் நிறைவேற்றிய பாவம், மெய்யின் வகையைச் சார்ந்த
தீமையாக இன்று விளைந்துள்ளது' என்றனர்.
114 |
மணித்திறத்
தெழுந்த தோளான் மயங்கிவர் துயரங் கண்டு
பிணித்திறத் திசைத்த சொல்லும் பெட்பெழக் கேட்டுத் தானு
மணித்திறத் திலங்கு மார்பி லன்பினை யொளிக்க வாற்றா
துணித்திறத் தலர்ந்த பூங்கண் டுளித்தநீர் தூறிற் றன்றோ. |
|
"மணித் திறத்து
எழுந்த தோளான், மயங்கு இவர் துயரம் கண்டு,
பிணித் திறத்து இசைத்த சொல்லும் பெட்பு எழக் கேட்டு, தானும்,
அணித் திறத்து இலங்கு மார்பில் அன்பினை ஒளிக்க ஆற்றா,
துணித் திறத்து அலர்ந்த பூங் கண் துளித்த நீர் தூறிற்று அன்றோ. |
மணிகளின் ஒளியோடு
நிமிர்ந்த தோள்களைக் கொண்ட ஆணரன்,
மயங்கும் இவர்கள் துயரத்தைக் கண்டு, நோயின் தன்மையாய்க் கூறிய
சொல்லையும் விருப்பம்மிகக் கேட்டு, தானும் அழகுத் திறத்தோடு இலங்கும்
தன் நெஞ்சிற் கொண்டுள்ள அன்பை மறைக்க மாட்டாமல், தன்னை
வெளிப்படுத்தத் துணிந்தபோது, தன் மலர்ந்த அழகிய கண் முதலில் துளித்த
நீரைப் பின் மழையாகப் பெய்தது.
|