பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்42

     'பங்கம்' என்பது கடைக்குறையாய்ப் 'பங்கு' என நின்றது. ஆயிரம்
சங்குகளுக்கு ஓர் இடம்புரிச் சங்கும், ஆயிரம் இடம் புரிகளுக்கு ஒரு
வலம்புரிச் சங்கும் தலைமையாகக் கூட்டம் கூட்டமாய் இயங்கும் இயல்பு
பற்றிச் 'சங்கு' இங்குக் 'கூட்டம்' என்ற குறிப்புப் பொருள் தந்து நின்றது.



                    39
கான்முகம் புதைத்த கண்மலர் நாட்டிற் கலக்கமுற் றிடந்தொறு
                                           மியாரும்
வான்முகம் புதைத்த முகின்முழக் கெஞ்ச மயங்கியார்த் தலறமற்
                                           றியூதர்
தேன்முகம் புதைத்த மலரென வங்கோர் சிதைவில வாழ்தலைக்
                                           கண்டே
யூன்முகம் புதைத்த வேலர சஞ்சி யொருங்ககன் றேகுமி
                                           னென்பான்.
 
"கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில், கலக்கம் உற்று இடந்
                                   தொறும் யாரும்,
வான்முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற,
                                   மற்று யூதர்,
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர் சிதைவு இல
                                   வாழ்தலைக் கண்டே,
ஊன் முகம் புதைத்த வேல் அரசு, அஞ்சி, 'ஒருங்கு அகன்று
                                   ஏகுமின்!' என்பான்.

     "வாசனையைத் தன்னிடத்துக் கொண்டுள்ள தேனோடு கூடிய
மலர்கள் மிகுந்த எசித்து நாட்டில், இடந்தோறும் எல்லோரும்
மனக்கலக்கம் கொண்டு, வான வெளியை மூடி மறைத்த மேகங்களின்
முழக்கமும் குறைபடுமாறு மயங்கி முழங்கி அலறினர். மற்று யூதரோ,
தேனைத் தன்னிடத்துக் கொண்டுள்ள மலர்கள்போல் அங்கு ஒரு
கேடுமின்றி வாழ்ந்தனர். பகைவர் ஊனைத் தன்னிடத்துக் கொண்டுள்ள
வேலைத் தாங்கிய மன்னன் இதனைக் கண்டு அஞ்சி, யூதரை நோக்கி,
'எல்லோரும் ஒன்றாக இந்நாட்டை விட்டுப் போய்விடுங்கள்!' என்பான்.

                    40
என்பது வீர மோயிசன் றன்கை யெடுத்திடர் தீர்ப்பது
                                     மொன்றாய்த்
துன்பது நீங்க வரசுளத் திகன்று தொழும்பராய் நின்மினென்
                                     றமையா
லொன்பது சாப நிரை நிரை தொடர வுவமியா மதுகையோ
                                     னிட்ட
பின்பிது கணியா னோவெனச் சினந்து பெயர்ப்பரு
                              மிடுக்கணுய்த் திட்டான்.