பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்43

"என்பதும், வீர மோயிசன் தன் கை எடுத்து இடர் தீர்ப்பதும்
                                      ஒன்றாய்த்
துன்பு அது நீங்க, அரசு உளத்து இகன்று, தொழும்பராய் நின்மின்!'
                                      என்றமையால்,
'ஒன்பது சாபம் நிரை நிரை தொடர, உவமியா மதுகையோன், இட்ட
பின்பு இது கணியானோ?' என, சினந்து, பெயர்ப்பு அரும் இடுக்கண்
                                      உய்த்திட்டான்.

     "என்று மன்னன் சொல்வதும், வீரமுள்ள மோயிசன் தன்கையில்
பிரம்பை எடுத்துத் துன்பத்தைத் தீர்ப்பதும் ஒன்றாய்ச் சேர்ந்து அத்துன்பம்
நீங்கவே, அரசன் தன் உள்ளத்தில் பகைத்து, 'மீண்டும் அடிமைகளாகவே
நிலைத்திருங்கள்!' என்று தடுத்தான். எனவே, ஒப்பற்ற வல்லமை கொண்ட
ஆண்டவன், இவ்வாறு ஒன்பது சாபங்களை வரிசை வரிசையாகத் தொடர
விட்ட பின்பு, இதுவும் கருதாதிருப்பானோ?' என்று சொல்லத் தக்க
விதமாய், அவ்வாண்டவன் சினந்து, நீக்குதற்கரிய ஒரு துன்பத்தைச்
செலுத்தி விட்டான்.

                       41
கண்முழு தட்ட விருளிரா நடுவிற் கதத்தள வருந்திறன் மிக்க
விண்முழு தன்றி மண்முழு திறைஞ்சும் வேந்தர்வேந்
                              தரைநொடிப் பொழுதின்
மண்முழு தாண்ட கோன்றலை மகனு மற்றவர் தலைமகர் யாரு
மெண்முழு தின்றி யிறந்துயிர் செகுப்ப வெசித்துநா டெங்கணுங்
                              கொன்றான்.
 
"கண் முழுது அட்ட இருள் இரா நடுவில், கதத்து அளவு அருந்
                                      திறல் மிக்க,
விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும் வேந்தர் வேந்து,
                             அரை நொடிப் பொழுதில்,
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும், மற்றவர் தலை மகர்
                                      யாரும்,
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப, எசித்து நாடு எங்கணும்,
                                      கொன்றான்.

     "தன் சினத்தின் அளவாக அதனை நிறைவேற்றுதற்குரிய அரிய
வல்லமையிலும் மிக்கவனும், விண்ணுலகம் முழுவது மல்லாமல் மண்ணுலகம்
முழுவதுமே சேர்ந்து வணங்கும் மன்னர் மன்னனுமாகிய ஆண்டவன், கண்
முழுவதையும் பறித்துவென்ற இருள் கவிந்த நடு இரவில், எசித்து நாடு
முழுவதும் ஆண்ட மன்னனின் தலைமகனும், ஏனைய எசித்தியர் தம்