|
தலைச்சன் புதல்வர்
யாவரும் அவ்வெசித்து நாட்டின் எவ்விடத்தும்,
எண்ணிக்கையின்றி முழுதுமாக உயிரை அழிப்பதன் மூலம் இறக்குமாறு
அரை நொடிப் பொழுதில் கொன்று முடித்தான்.
'இறந்து
உயிர் செகுப்ப' என்பதனை 'உயிர் செகுத்து இறப்ப' என
மாற்றிக் கொள்க.
| 42 |
ஒல்லென வுளைந்து
கண்புதைத் தலறி யுடன்றவிக் கடவுளோ
டெதிர்ப்ப
வல்லென வெவரோ மற்றெமை யொருங்கு மடிப்பனோ
வெனவுளத்
தஞ்சி
யல்லென வெண்ணா தரசன்மோ யிசனை யழைத்தும ரிக்கணத்
தெழுகச்
சொல்லென விரைப்ப வனைவரு முவந்து துணுக்கென வெழுந்
தொருங்
ககன்றார். |
| |
"ஒல்
என உளைந்து, கண் புதைத்து அலறி, 'உடன்ற இக் கடவுளோடு
எதிர்ப்ப
வல் என எவரோ? மற்று எமை ஒருங்கு மடிப்பனோ!' என உளத்து
அஞ்சி,
அல் என எண்ணாது அரசன் மோயிசனை அழைத்து, 'உமர் இக்
கணத்து
எழுகச்
சொல்!' என விரைப்ப, அனைவரும் உவந்து, துணுக்கென எழுந்து
ஒருங்கு
அகன்றார். |
"அரசன்
அது கண்டு, ஒல்லென அழுது நொந்து, கண்ணைப்
பொத்திக் கொண்டு அலறி, 'சினங் கொண்ட இக் கடவுளோடு எதிர்த்து
நிற்க வல்லவர் என எவரும் உண்டோ? மற்றும் எம்மையும் அவன் ஒருங்கு
மடிவிப்பானோ!' எனத் தன் மனத்துள் அஞ்சி, இரவு எனவும் எண்ணாமல்
மோயிசனை அழைத்து, 'உன்னவர் இக்கணமே இந்நாட்டை விட்டு எழுந்து
போகச் சொல்!' என விரைவுபடுத்தவே, யூதர் அனைவரும் மகிழ்ந்து,
விரைந்து எழுந்து ஒருங்கு அதனை விட்டு அகன்றனர்.
|