|
| 43 |
இற்றியா
வையுமிவ் விளவறான் காட்டி யெசித்திடைச் சிதறிய
வெருவின்
வெற்றியா லியூதர் தஞ்சிறை தீர்த்து மிடைந்தன தெரிவைய
ரிளைஞர்
முற்றியாங் கிழவ ரிவரல தரும் போர் முரண்பட மலைப்புய
வீரப்
பெற்றியா ரறுநூ றாயிரர் கடல்சேர் பெருஞ்சுரத் தேகின
ரன்றே. |
| |
"இற்று யாவையும்
இவ் இளவல் தான் காட்டி, எசித்திடைச் சிதறிய
வெருவின்
வெற்றியால் யூதர் தம் சிறை தீர்த்து, மிடைந்தன தெரிவையர்
இளைஞர்
முற்றி ஆம் கிழவர், இவர் அலது, அரும் போர் முரண் பட
மலைப் புய வீரப்
பெற்றியார் அறு நூறாயிரர் கடல் சேர் பெருஞ் சுரத்து ஏகினர்
அன்றே. |
"இவை
யாவற்றையும் சிறுவனாய் இருக்கும் இவ்வாண்டவனே
நிகழ்த்திக் காட்டினான்; தான் எசித்து நாட்டில் பரவ விட்ட அச்சத்தின்
வெற்றியால் யூதர்களின் அடிமைச் சிறையைத் தீர்த்து வைத்தான். அதனால்,
திரளான மகளிரும் இளைஞரும் வயது முதிர்ந்த கிழவருமென்ற இவர்கள்
மட்டுமல்லாது, அரிய போரில் மாறுபட்டு நிற்பதற்குரிய மலை போன்ற
புயமுள்ள வீரப் பண்புடையோர் ஆறு நூறாயிரம் பேரும் கடலை அடுத்துக்
கிடந்த பெரிய பாலை நிலத்தின் வழியாகச் சென்றனர்.
'அன்றே'
அசைநிலை. மிடைந்தன-மிடைந்த: பெயரெச்சம் இடையே
'அன்' சாரியை பெற்று வந்தது. விரர் தொகை மட்டும் ஆறிலட்சம் எனக்
கொள்க. இற்று-இது: இங்கு 'இவை' என்னும் பொருளில் நின்றது.
| 44 |
விண்ணுக வார்த்து
வீழுரு மன்ன வேந்துமீண் டுலம்பியை
யென்னப்
பண்ணுக பசும்பொற் கொடிஞ்சியந் தேரும் பண்ணுக புரவியுஞ்
செந்தீக்
கண்ணுக படுமா மதகரி மாவுங் கடிந்தனர்த் தகைப்பனென்
றயில்கொண்
டெண்ணுக விடமற் றபயர்மா கடல்சூழ்ந் தெய்தகோல்
பின்னுறத் தொடர்ந்தான். |
|