|
"விண்
உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி,
'ஐ என்னப்
பண்ணுக பசும் பொற் கொடிஞ்சி அம் தேரும்! பண்ணுக புரவியும்!
செந்தீக்
கண்ணுக படு மா மத கரிமாவும்! கடிந்தனர்த் தகைப்பன்!' என்று,
அயில் கொண்டு,
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து, எய்த கோல் பின்
உறத் தொடர்ந்தான். |
"வானம்
இடிந்து விழுமாறு முழங்கி விழும் இடி போல எசித்து
மன்னன் மீண்டும் முழங்கி "பசும் பொன்னாலான மொட்டைக் கொண்ட
அழகிய தேர்களையும் விரைவாகச் சித்தஞ் செய்க! குதிரைகளையும் சித்தஞ்
செய்க! இயல்பாகத் தோன்றும் பெருமதங் கொண்ட யானைகளையும்
செந்நெருப்பாய்ச் சீறுமாறு கருதிச் சித்தஞ் செய்க! விலகிச் சென்றவர்களை
இடையே சென்று நானே தடுப்பேன்!" என்று சொல்லித் தானும் வேலைத்
தாங்கிக் கொண்டு, வீரரென்னும் பெருங்கடல் எண்ணுக்கு அடங்காமலும்
தரையில் இடம் கொள்ளாமலும் சூழக் கொண்டு, எய்த அம்பின் வேகமும்
தனக்குப் பின்னடையுமாறு யூதரைப் பின்தொடர்ந்தான்.
கரி
மா - யானையாகிய விலங்கு ; யானை.
| 45 |
நோக்கிய
நோக்கந் திசைதொறுந் தீக்க நூக்கருஞ் செருக்கொடு
நோக்கித்
தாக்கிய தாக்கி னுடன்றுளந் தாக்கச் சலத்தடு மடங்கலே றன்னா
னீக்கிய பாக்கத் தகல்வரைத் தாக்க நெருங்கிய கானெடு
மறைவை
யாக்கிய படத்தி லார்த்தகார் முகில்விட் டடைத்தனன்
முதுகையின் வல்லோன். |
| |
"நோக்கிய நோக்கம்
திசை தொறும் தீக்க நூக்க அருஞ் செருக்கொடு
நோக்கி,
தாக்கிய தாக்கின் உடன்று, உளம் தாக்கச் சலத்து அடும் மடங்கல்
ஏறு அன்னான்,
நீக்கிய பாக்கத்து அகல்வரைத் தாக்க நெருங்கிய கால், நெடு
மறைவை
ஆக்கிய படத்தில், ஆர்த்த கார் முகில் விட்டு அடைத்தனன்,
மதுகையின் வல்லோன். |
|