"நான்
சொல்லிக் காட்டிய தன்மையால், பசுங் கதிரையே
தெளித்து எழுதியது போன்ற கோலின் திறத்தாலும், மணியின் சாயலாக
எழுதப்பட்ட வளமுள்ள இக்கதையை நான் கூறியவற்றை நினைவிற்கொண்டு
ஒழுங்குபடப் பாருங்கள்; துன்பத்தின் மூலமாக இறைவன் விளைவிக்கும்
பெரும் பயனால், ஒருவன் நாட்டில் இருந்து கொண்டே அருளோடு
அழகுபடச் செய்த அறம் உலகையே காத்தது" என்று சூசை கூறி முடித்தான்.
முனிவர்
போலித் தவம் புறக்கணித்தல்
- விளம்,
- விளம். - மா, கூவிளம்
120 |
சேற்றுறை
தாமரை விரிசெவ் வேடுவான்
வீற்றுறை வெங்கதிர் விழுங்கிற் றாமென
நூற்றுறைப் புலமையோ னுண்டன் வாயுரை
யூற்றுறை யினிமையம் முனிவ ருண்டுளார். |
|
சேற்று உறை தாமரை
விரி செல் ஏடு, வான்
வீற்று உறை வெம் கதிர் விழுங்கிற்று ஆம் என,
நூல் துறைப் புலமையோன் நுண் தன் வாய் உரை
ஊற்று உறை இனிமை, அம் முனிவர் உண்டு உளார். |
சேற்றில் வளரும்
தாமரையின் விரிந்த செந்நிற இதழ், வானில்
பெருமையோடு தங்கும் கதிரவனின் வெப்பமான கதிரை விழுங்கியதுபோல,
அறிவு நூல் துறைகளிலெல்லாம் புலமை கொண்டுள்ள சூசை தன் வாயால்
கூறிய நுண்ணிய உரை என்னும் ஊற்றினின்று பிறந்த இனிமையை,
அம்முனிவரெல்லாம் மேற்கூறியவாறு உண்ணலாயினர்.
121 |
உண்டதே
னருகுநின் றுகுத்தி யாழொலி
கொண்டதே னினிதிசை பாடுங்
கொள்கைபோற்
கண்டதே யுணர்ந்தெனக் கனிந்து கேட்டன
பண்டதே யுணர்ந்துபற் பலவு மோதினார். |
|
உண்ட தேன் அருகு
நின்று உகுத்து, யாழ் ஒலி
கொண்ட தேன் இனிது இசை பாடும்
கொள்கை போல்,
கண்டு அதே உணர்ந்து என, கனிந்து கேட்டன
பண்டு அதே உணர்ந்து, பல் பலவும் ஓதினார்: |
|