126 |
செம்பொறிச்
சினத்தபோர்ச் செறுநர்க் கஞ்சலாற்
பைம்பொறி யெயிலின்வாய் படியப் பூட்டியுள்
வெம்பொறி எழத்தமை வெட்டி வீழ்த்தெனா
வைம்பொறி யடக்கியுள் ளவாக்கொண் டாலென்பார். |
|
"செம் பொறிச்
சினத்த போர்ச் செறுநர்க்கு அஞ்சலால்,
பைம் பொறி எயிலின் வாய் படியப் பூட்டி, உள்
வெம் பொறி எழத் தமை வெட்டி வீழ்த்து என ஆம்,
ஐம் பொறி அடக்கி உள் அவாக் கொண்டால்" என்பார். |
"வெளித் தோற்றத்தில்
ஐம்பொறிகளை அடக்கி, உள்ளத்துள் அவை
பற்றிய ஆசையைக் கொண்டிருந்தால், தீப்பொறி போன்ற சினங்கொண்ட
போரில் பகைவருக்கு அஞ்சியமையால், பசுமையான எந்திரப் பொறிகள்
கொண்ட மதிலின் வாயிலை நெருங்கப் பூட்டி, உள்ளே கொடிய சினப்
பொறி பறக்கத் தம்மையே வெட்டி வீழ்த்திக்கொள்வது போல் ஆகும்"
என்பார்.
என + ஆம் -
'எனவாம்' எனற்பாலது, 'எனாம்' என நின்றது
தொகுத்தல் விகாரம்.
127 |
கோலமே
வீணடா குளித்தல் வீணடா
சூலமே வீணடா துறவு வீணடா
காலமே மந்திரங் கதைத்தல் வீணடா
சீலமே கெடநசை செகுத்தி லாலென்பார். |
|
"கோலமே வீண்,
அடா, குளித்தல் வீண், அடா,
சூலமே வீண், அடா, துறவு வீண், அடா,
காலமே மந்திரம் கதைத்தல் வீண், அடா,
சீலமே கெட நசை செகுத்து இலால்!" என்பார். |
"ஒடுக்கமே கெடுமாறு
உள்ளத்தில் எழும் ஆசையை அழித்தல்
இல்லையேல், தவம் கருதிய கோலமும் வீண்; குளித்தலும் வீண்; சூலம்
ஏந்துதலும் வீண்; துறவு பூணுதலும் வீண்; காலமே எழுந்து மந்திரம்
ஓதுதலும் எல்லாம் வீணே!" என்பர்.
|