பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்431

     சூசை, பலவாறாக அம்முனிவர் கூறிய சொல்லின் கருத்தைக்
கண்டறிந்து, முந்திய போலித் தவ நெறியை விட்டொழித்த அம்முனிவர்
யாவரும் நல்ல தவ நெறியை உணர்ந்து கொண்டதனால் ஏற்பட்ட
இன்பத்தோடு, மேலும் குற்றமற்ற நிலையான தவ நெறிக்கான உறுதி
நிலைகளை அவர்களுக்கு வகுத்துக் காட்டினான்.

              130
காட்டிய வுறுதியுங் கதிர்தெ ளித்தவண்
டீட்டிய சரிதையுஞ் செய்த ஞானமுள்
ளூட்டிய நயத்தவ ருளங்கு ளிர்ந்தெனக்
கோட்டிய கதிர்கள்போய் நிலங்கு ளிர்ந்ததே.
 
காட்டிய உறுதியும், கதிர் தெளித்து அவண்
தீட்டிய சரிதையும் செய்த ஞானம் உள்
ஊட்டிய நயத்து அவர் உளம் குளிர்ந்து என,
கோட்டிய கதிர்கள் போய் நிலம் குளிர்ந்ததே.

     சூசை சொல்லிக் காட்டிய உறுதிகளும், கதிரைத் தெளித்தாற்போல்
அங்குத் தீட்டியிருந்த ஆணரன் வரலாறும் தமக்குத் தந்த ஞானம் தம்
உள்ளத்தில் ஊட்டிய இன்பத்தால் அம் முனிவர் தம் உள்ளம் குளிர்ந்தாற்
போல, ஞாயிறு வளைத்துக் கொண்ட கதிர்கள் மறைந்து போகவே நிலமும்
குளிர்ந்தது.

              131
அவ்விய மொழிந்தவ ரசைவு தீர்ந்தனர்
வவ்விய நெறிவிடா மனநி லைபெற
நவ்விய முகத்துறை நாதன் வேண்டினான்
செவ்விய வுளம்புரை தேன்பெய் கோலினான்.
 
அவ்வியம் ஒழிந்து, அவர் அசைவு தீர்ந்தனர்.
வவ்விய நெறி விடா மனநிலை பெற,
நவ்விய முகத்து உறை நாதன் வேண்டினான்,
செவ்விய உளம் புரை தேன் பெய் கோலினான்.

     அம்முனிவர், இவ்வாறு தம் மனக்கோட்டம் ஒழிந்து, துயில் மூலம்
சோர்வும் நீங்கப் பெற்றனர். அப்பொழுது, செவ்விய தன் உள்ளம் போல்
தேனைப் பொழியும் மலர்க் கோலை உடைய