வனாகிய சூசை, அம்முனிவர்
பற்றிக் கொண்ட நெறியைக் கைவிடாத
மனநிலை பெறுமாறு, அழகிய முகத்தோடு அங்கிருந்த குழந்தை நாதனை
வேண்டினான்.
132 |
ஞானமே தெளித்திவர்
மனத்தின் ஞாயிறு
வானமே லெழுந்தொளி வழங்கிற் றாயபின்
னீனமே யொழித்தியென் றெவரு மேற்றியக்
கானமே கழிப்பநேர் வழியைக் காட்டினார். |
|
ஞானமே தெளித்து,
இவர் மனத்தின் ஞாயிறு
வான மேல் எழுந்து ஒளி வழங்கிற்று ஆய பின்,
'ஈனமே ஒழித்தி!' என்று எவரும் ஏற்றி, அக்
கானமே கழிப்ப நேர் வழியைக் காட்டினார். |
இரவெல்லாம்
ஞானத் தெளிவு பெற்று, இம்முனிவர்தம் மனம்
போலவே ஞாயிறு வானத்தின் மேல் எழுந்து ஒளியை வழங்கியபின்,
'எங்கள் இழிவெல்லாம் நீயே ஒழித்தாய்!" என்று யாவரும் சூசையைப்
போற்றி, அக்காட்டைக் கடந்து செல்வதற்கான நேர் வழியைக் காட்டினர்,
'ஏற்றி' என்பது
ஏத்தி' என்பதன் போலி
133 |
தொன்முகத்
ததிட்டனுந் தொகைத்த மோனரும்
பொன்முகத் தடைந்தவிம் மூவர் போதலான்
மின்முகத் திடியென வரற்றி விம்மிமேற்
சென்முகத் தெழுந்தகாக் கடந்து செல்கின்றார். |
|
தொல் முகத்து
அதிட்டனும், தொகைத்த மோனரும்,
பொன் முகத்து அடைந்த இம் மூவர் போதலால்,
மின் முகத்து இடி என அரற்றி விம்மி, மேல்
செல் முகத்து எழுந்த காக் கடந்து செல்கின்றார். |
வயதுப் பழமை
முகத்தில் கொண்ட அதிட்டனும், பெருந்
தொகையான பிற முனிவரும், பொன் போன்ற முகத்தோடு தம்மை
வந்தடைந்த இம் மூவரும் பிரிந்து போதலால், மின்னலிடத்துத் தோன்றும்
இடி போலப் புலம்பி விம்மினர். அவ்வாறு, மேலே மேகத்து அளவாக
உயர்ந்து நின்ற அச் சோலையை அம்மூவரும் கடந்து செல்கின்றனர்.
சித்திரக்கூடப்
படலம் முற்றும்.
ஆகப்
படலம் 20க்குப் பாடல்கள் 1932.
|